New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/03/8F0IZZFB5U9e9xrDlTkQ.jpg)
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்காக தீவிரமாக தயாராகி வரும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில், மாவட்ட செயலாளர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி வரும் நிலையில், தற்போது தன்னிடம் உதவியாளராக இருப்பவரின் மகனுக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பை கொடுத்துள்ளார் விஜய்.
தமிழ் சினிமாவில், முன்னணி நடிகராக இருக்கும் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கி தற்போது 2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறார். மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து வெளியேறிய ஆதவ் அர்ஜூனா தற்போது த.வெ.க கட்சியில் இணைந்துள்ள நிலையில், அவருக்கு தேர்தல் வியூக வகுப்பாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு, த.வெ.க கட்சியில், உள்ள அணிகள் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிராக போராடி வரும் மக்களை சந்தித்து விஜய், அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்திருந்தார். அதேபோல் சமீபத்தில் ரமலான் நோம்பு கொண்டாடும் வகையில், த.வெ.க தரப்பில், இப்தார் நோம்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது.
கட்சி தொடங்கி 2-வது வருடத்தில் அடியெடுத்து வைத்திருந்தாலும், தனது கட்சி 2026 சட்டசபை தேர்தலில் தான் போட்டியிடும் என்று அறிவித்துள்ள விஜய், அதற்காக தயராகும் வகையில், பிரபல தேர்தல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோருடன் இணைந்து தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறார். அதேபோல் கடந்த சில வாரங்களாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாவட்ட செய்லாளர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது, சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
த.வெ.க தலைவர் விஜய், தன்னிடம் உதவியாளராக இருக்கும், ராஜேந்திரன் என்பவரின் மகன் சபரிநாதன் என்பவரை சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக அறிவித்துள்ளார். இந்த மாவட்டத்தின் செயலாளர் யார் என்பதில், கடும் போட்டி நிலவி வந்த நிலையில், சபரிநாதன் தற்போது. மாவட்ட செயவாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் ஆறாம் கட்டமாக 19 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
— TVK Vijay (@TVKVijayHQ) March 13, 2025
மாவட்ட நிர்வாகிகளின் விவரங்களை அறிய... Click Here https://t.co/d93PmAyLAz
புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும்…
இதனிடையே தேர்வு செய்யப்பட்டுள்ள மாவட்ட செயலாளர்கள், கழக விதிகளின்படி நியமிக்கப்பட்டுள்ளனர். புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.