/indian-express-tamil/media/media_files/2025/03/03/8F0IZZFB5U9e9xrDlTkQ.jpg)
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், இந்த கூட்டத்தில் பேசிய கட்சியில் தேர்தல் வியூக வகுப்பாளரான ஆதவ் அர்ஜூன் விஜய் இனி தளபதி இல்லை வெற்றித்தலைவர் 40 ஆண்டுகளாக இருக்கும் குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவோம். குடும்ப ஆட்சிக்கு ஓய்வு கொடுக்கவே நாங்கள் தயாராகி வருகிறோம் என்று கூறியுள்ளார்.
த.வெ.க பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
இஸ்லாமியர்களின் உரிமைகளை பறிக்கும் வக்ஃபு சட்ட திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்.
மீனவர் போராட்டத்திற்கு ஆதரவு மற்றும் அவர்களின் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு எட்டப்பட வேண்டும்.
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கக் கூடாது.
இருமொழிக் கொள்கையில் உறுதி.
நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பு தேவையில்லை.
மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க, சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் தேவை.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம்.
சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு காரணமான கையாலாகாத திமுக அரசுக்கு கண்டனம்.
டாஸ்மாக்கின் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.
சமூக நீதியை நிலை நிறுத்த, சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வு நடத்த வேண்டும்.
இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு பொது வாக்கெடுப்பே ஒரே தீர்வு.
பன்னாட்டு அரங்கிற்கு தந்தை பெரியார் பெயரை சூட்டுக.
கொள்கைத் தலைவர்களின் வழியில் பயணிப்போம்.
தலைவருக்கே முழு அதிகாரம்.
கழகப் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
கழகத்திற்காக அயராது பாடுபட்டு மறைந்த கழகச் செயல்வீரர்களுக்கு இரங்கல் என 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us