Advertisment

வேங்கை வயல் விவகாரம்: மறு விசாரணை தேவை; த.வெ.க தலைவர் விஜய் அறிக்கை!

ஒரு விசாரணையின் முடிவுகள் கேள்விக்கு உள்ளாக்கப்படுகின்றன எனில், அவற்றை மறு விசாரணைக்கு உட்படுத்துவதில் எவ்விதத் தவறும் இல்லை.

author-image
WebDesk
New Update
Vijay Vengai Vayal

வேங்கை வயல் விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று, த.வெ.க தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisment

புதுக்கோட்டை மாவட்டத்தில், உள்ள வேங்கை வயல் கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, தண்ணீர் தொட்டில் மலம் கலந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவாகரத்தில் விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரிகள், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 3 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இந்த வழக்கில் மறுவிசாரணை வேண்டும் என்று த.வெ.க தலைவர் விஜய் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், வேங்கை வயல் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி, உண்மையான குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும். ஒரு விசாரணையின் முடிவுகள் கேள்விக்கு உள்ளாக்கப்படுகின்றன எனில், அவற்றை மறு விசாரணைக்கு உட்படுத்துவதில் எவ்விதத் தவறும் இல்லை.

வேங்கை வயல் விவகாரத்தில், குற்றம் செய்தவர்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள் குறித்துப் பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன. எனவே, குறைகாணவே இயலாத நடுநிலையான பார்வையுடன் இந்த விவகாரத்தில், உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டோருக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும். அதன் மூலம் மக்களுக்கும் சரியான நீதி வழங்கப்பட்டது என்ற நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்பதே இந்த விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடாகும்.

Advertisment
Advertisement

மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிபிசிஐடி ஏற்கெனவே விசாரணை நடத்தி, கால தாமதமாக விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. ஒன்றிய அரசின் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டால் அது மேலும் கால தாமதத்தையே ஏற்படுத்தும். இது வேங்கை வயல் மக்களுக்கு விரைவாக நீதியைப் பெற்றுத் தராது. வேங்கை வயல் விவகாரத்தில் உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். வருங்காலங்களில் இது போன்ற ஒரு கொடுஞ்செயல் நிகழாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஆகவே, கடும் கண்டனத்திற்கு உரிய, மனிதத் தன்மையற்ற செயலான வேங்கை வயல் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில், சிறப்புப் புலனாய்வுக் குழு நியமித்து விசாரணை நடத்தி, உண்மையானக் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Tamilnadu News Latest
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment