/indian-express-tamil/media/media_files/2025/09/28/karur-stampede-2025-09-28-08-31-23.jpg)
கரூரில் கடந்த செப்டம்பர் 27-ந் தேதி நடைபெற்ற த.வெ.க பரப்புரை கூட்டத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் குறித்து அவதூறு பரப்பும் வகையில் சமூகவலைதளங்களில் பேசியதாக பா.ஜ.க-வை சேர்ந்த கைது செய்யப்பட்டவர்களில் சகாயம் (38), சிவனேசன், ஆவடியைச் சேர்ந்த த.வெ.க வார்டு செயலாளர் சரத்குமார் (32) ஆகியோர் கைது செய்யப்பட்டு மூவருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 27-ந் தேதி த.வெ.க பிரச்சார கூட்டம், கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கி, இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 60க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் சிலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். இச்சம்பவம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் தங்கள் வருத்த்த்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்த கூட்டத்தில் நெரிசல் ஏற்பட முக்கிய காரணம், அதிக கூட்டம், விஜய் தாமதமாக வந்தடைந்தது, மற்றும் அடிப்படை வசதிக் குறைபாடுகளான திடீர் மின்வெட்டு மற்றும் தற்காலிகக் கொட்டகை இடிந்து விழுந்தது உள்ளிட்ட பல காரங்கள் கொல்லப்படும் நிலையில், இச்சம்பவத்திற்குக் காவல்துறையும், ஆளுங்கட்சியான தி.மு.க. உறுப்பினர்கள், குறிப்பாக முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி ஆகியோரே காரணம் என்று த.வெ.க குற்றம் சாட்டியுள்ளது.
இந்த சம்பவத்தின் பின்னணியில் அரசியல் சதி இருப்பதாக விஜய் குற்றம் சாட்டி, மத்தியப் புலனாய்வுத் துறை (CBI) அல்லது ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) மூலம் சுதந்திரமான விசாரணைக்குக் கோரி, மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இதனிடையே, தமிழ்நாடு முதல்வர்.ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து, உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் ரூ10 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ1 லட்சம் இழப்பீடு வழங்குவதாகவும் அறிவித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கவும் அவர் உத்தரவிட்டார். இந்தக் கூட்ட நெரிசல் சம்பவம், கரூர் முழுவதும் விஜயைக் கைது செய்யக் கோரும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதன் மூலம் பரவலான கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Greater Chennai Police have registered cases against 25 social media accounts for spreading false rumors about the Karur political rally stampede. The public is urged not to share fake or misleading posts — strict legal action will be taken against violators.#ChennaiPolice… pic.twitter.com/OCR16xmh2l
— GREATER CHENNAI POLICE -GCP (@chennaipolice_) September 29, 2025
இதனிடையே, சென்னை காவல்துறையினர், சமூக ஊடகங்களில் பொதுக் கூட்டங்கள் குறித்துச் செய்திகளைப் பரப்பி, பொது அமைதியின்மையைத் தூண்டிய 25 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எக்ஸ் தளத்தில் ஒரு பதிவில் தெரிவித்தனர்.பொதுக் கூட்டங்களின்போது எந்தவொரு சம்பவத்தைக் குறித்தும் யாரும் அநாவசியமாகப் பயப்படவோ, பீதி அடையவோ கூடாது என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.
சமூக ஊடகங்களில் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் தவறான செய்திகள் அல்லது தகவல்களைப் பரப்புபவர்கள் சட்டத்தின் கீழ் பொறுப்புக்கூறப்படுவார்கள் என்றும் இதில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்குப் பயம் அல்லது தவறான தகவல்களை ஏற்படுத்தும் செய்திகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று காவல்துறை மீண்டும் வலியுறுத்தியுள்ளதுடன், சட்டம் கண்டிப்பாகப் பின்பற்றப்படும் என்றும் உறுதி அளித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.