New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/31/wQFJSIvie2ZU9Ix9KIBC.jpg)
தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளாக புஸ்ஸி ஆனந்த், ஆதவ் ஆர்ஜூனா இருவரும், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பா.ஜ.க. குறித்து ஒருமையில் பேசிக்கொள்ளும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அண்ணாமலையாவது 10 பேரை வச்சிக்கிட்டு, எலக்ஷன்ல நின்னாரு, ஆனா எடப்பாடியை நம்பி எவனும் கூட்டணிக்கு வரமாட்டான் என்று த.வெ.க தேர்தல் வியூக வகுப்பாளர் ஆதவ் அர்ஜூன் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துடன் பேசிக்கொண்டு போகும் வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். தற்போது கட்சிப்பணிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ள விஜய், அடுத்து வரும் 2026 சட்டசபை தேர்தலில் தனது கட்சியுடன் தேர்தலில் போட்டியிட உள்ளார், இதற்காக பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விஜய் சினிமாவில் தனது கடைசி படமாக ஜனநாயகன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கிறார்.
அதே சமயம், அவ்வப்போது அரசியல் பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு என தொடர்ந்து அரசியல் பணிகளிலும் ஈடுபட்டு வரும் விஜய், தொகுதிவாரியாக 10-ம், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண், பெற்ற முதல் 3 மாணவர்களை அழைத்து பரிசு வழங்கும் விழா தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நேற்று நடைபெற்றது. 3-வது ஆண்டாக நடைபெறும் இந்த விழா மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற தலைவர் விஜய், மாணவர்களுடன் உரையாற்றிய நிலையில், அவர்களுக்கு பரிசு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சி தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவிய நிலையில், தற்போது த.வெ.க கட்சியின் தேர்தல் வியூக வகுப்பாளர் ஆதவ் அர்ஜூனா, பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இருவரும், ஜாலியாக பேசிக்கொண்டே நடந்து செல்லும் வீடியோ பதிவு ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில் இருவரும் சிரித்துக்கொண்டே பேசி வரும் நிலையில், பா.ஜ.க கூட்டணி உடைந்துவிடும் என்று ஆதவ் அர்ஜூன் சிரித்துக்கொண்டே சொல்கிறார்.
#அடப்பாவமே
— மருது அழகுராஜ் (@MaruthuAlaguraj) May 30, 2025
அண்ணாமலையை நம்பியாவது பத்துப் பேர் வந்தார்கள் எடப்பாடிய நம்பி எவனும் கூட்டணிக்கு வரமாட்டான்-
ஆதவ் அர்ஜுனா pic.twitter.com/KvJOzC1RMI
மேலும், அண்ணாமலையாவது (முன்னாள் பா.ஜ.க. தலைவர்) 10 பேரை கூட வச்சிக்கிட்டு, தேர்தல்ல நின்னு 18 பர்சென்ட் ஓட்டு வாங்கினார். ஆனால் எடப்பாடியை நம்பி எவனும் கூட்டணிக்கு வர மாதிரி தெரியலை என்று ஆதவ் அர்ஜூனா பேசிக்கொண்டு வருகிறார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும், பா.ஜ.க. அ.தி.மு.க கூட்டணி சமீபத்தில் உறுதியான நிலையில், இந்த கூட்டணியில், த.வெ.க.வை இணைக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.