கூட்டணி கட்சிகளின் அழுத்தங்கள் காரணமாக திருமாவளவன் அம்பேத்கருக்கான இந்த விழாவில் பங்கேற்கவில்லை என்று எனக்கு தெரிந்தாலும், அவரது மனசு முழுக்க முழுக்க இன்று நம்முடன் தான் இருக்கும் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற நூல் வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சிறப்பு விருந்திரான பங்கேற்றிருந்தார். இந்த விழாவில் விஜய்க்கு அம்பேத்கர் கேடயம் வழங்கப்பட்டதை தொடர்ந்து விஜய் அம்பேத்கர் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்றும் வழங்கப்பட்டது. அதன்பிறகு நீதியரசர் சந்துருவுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது.
மேலும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்து அம்பேத்கரின் பேரன், ஆனந்த் எல்டுடேவுக்கும், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கும் அம்பேத்கர் – பெரியார் இருவரும் ஒன்றாக இருக்கும் வகையிலான ஒரு நினைவு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து நிகழ்ச்சியில் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தகத்தை தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி விஜய் வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து முதல் புத்தகத்தை அம்பேத்கரின் பேரன் ஆனந்த் எல்டுடேவுக்கும், 2-வது புத்தகத்தை நீதி அரசர் சந்துருவுக்கும், 3-வது புத்தகத்தை ஆதவ் அர்ஜூளுக்கும், 4-வது புத்தகத்தை, விகடன் குழுவின் சீனிவாசனுக்கும் விஜய் வழங்கினார். இவர்களுடன் சேர்ந்து விஜய், தனது கையில் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தகத்துடன் போஸ் கொடுத்தார்,
இறுதியாக உரையாற்றிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததை வரமாக நினைக்கிறேன். இந்த மேடையில் நான் இருக்கிறேன் என்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. வன்மத்தை மட்டுமே தனக்கு காட்டிய இந்த சமூகத்திற்கு அம்பேத்கர் திருப்பி என்ன செய்தார் என்ற கேள்வி வரும்போது பிறப்பால் அனைவரும் சமம். நீ எந்த சாதியில் பிறந்திருந்தாலும, எந்த மதத்தை பின்பற்றினாலும், சட்டத்தின் முன் நம் அனைவரும் சமம் எனற உயரிய கோட்பாட்டை உறுதி செய்யும் நம் நாட்டின் அரசியல் சாசன சட்டத்தை வழங்கி பெருமை தேடி கொடுத்தவர் அம்பேத்கர்.
அவர் சந்தித்த சமூக கொடுமை தான் அவரை சமத்துவத்திற்காக போராட வைத்தது. அம்பேத்கர் இன்று உயிருடன் இருந்திருந்தால் என்ன நினைப்பார். இன்று இருக்கும் இந்தியாவை நினைத்து பெருமைப்படுவாரா அல்லது வருத்தப்படுவாரா? அப்படியே வருத்தப்பட்டாலும் எதை நினைத்து வருத்தப்படுவார்? சுதந்திரமான நியாயமான தேர்தல் தான் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம். தேர்தல் நியாயமாக நடக்கவில்லை என்று நான் சொல்லவிலலை. சுந்திரமாகவும், நியாயமாகவும் தான் தேர்தல் நடந்கிறது என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை மக்களுக்கு கொடுக்க வேண்டும்.
இது அமைய வேண்டும் என்றால் தேர்தல் ஆணையர்கள் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் தான் நியமிக்க வேண்டும் என்பது எனது கோரிக்கை. ஏப்ரல் 14 அம்பேத்கர் பிறந்த தினம். அன்று தான் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஜனநாயக உரிமைகள் பிறந்த தினம். அதனால் அந்த நாளை இந்தியாவின் ஜனநாயக உரிமைகள் தினமாக அறிவிக்க வேண்டும் என்பது எனது மற்றொரு கோரிக்கை. அதை இந்திய ஒன்றிய அரசிடம் நான் முன்வைக்கிறேன்.
அம்பேத்கர் பற்றி யோசிக்கும்போது சட்டம் ஒழுங்கு பற்றி யோசிக்காமல் இருக்க முடியாது. இன்றைக்கும் மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அதை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாத அரசு மேலிருந்து நம்மை ஆண்டுகொண்டு இருக்கிறது. அதே சமயம் இங்கிருக்கும் அரசு எப்படி இருக்கு? வேங்கை வயல் கிராமததில் என்ன நடந்துது என்பது அனைவருக்கும் தெரியும். சமூகநீதி பேசும் இங்கிருக்கும் அரசு அதற்கு எந்த விதமான நடவடிக்கையும் எடுத்த மாதிரி தெரியவில்லை. இதை அம்பேத்கர் இன்று பார்த்தால் வெட்கப்பட்டு தலைகுனிந்து போவார்.
இதற்கெல்லம் நிரந்தர தீர்வு என்னவென்றால், தமிழ்நாடடு மக்களுக்கு தேவையான, அடிப்படை வசதிகளை பாதுகாப்புடன், முறையாக, முழுமையாக அளிக்கும், மக்களை உண்மையாகவே நேசிக்கும் ஒரு நல்ல அரசு. இது அமைந்தாலே போதும். இங்கு தினமும் நடக்கும் பிரச்னைகளுக்கு சம்பிரதாயத்திற்கு ட்விட் போடுவது, அறிக்கை விடுவது, நானும் மக்களோடு மக்களாக இருக்கிறேன் என்று காட்டிக்கொள்வதும், மழை நீரில் நின்று போட்டோ எடுப்பதும் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் என்ன செய்வது சம்பிரதாயத்திற்காக சில நேரம் அவ்வாறு செய்ய வேண்டிய நிலை வருகிறது.
மக்கள் உணர்வுகளை மதிக்க தெரியாத, மக்களின் அடிப்படை வசதியான பாதுகாப்பை உறுதி செய்யாத, கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி, இருமாப்புடன் 200 வெல்வோம், என்று எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு, என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை, நீங்கள் உங்கள் சுய நலனுக்காக பல வழிகளில் பாதுகாத்து வரும், உங்கள் கூட்டணி கணக்குகள் அனைத்தும், 2026-ல் மக்கள் மைனஸ் ஆக்கிவிடுவார்கள் என்று பேசினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.