/indian-express-tamil/media/media_files/2025/02/11/ggqUGA3X2gdSp32I2zpo.jpg)
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் ஐடி விங் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில், இந்த கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய், உரையாற்றிய வீடியோ பதிவு ஒளிபரப்பபட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. தி.மு.க அதன் கூட்டணி கட்சிகளுடன் தீவிரமாக தேர்தல் நடவடிக்ககள் மேற்கொண்டு வரும் நிலையில், அ.தி.மு.க மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணியை உறுதி செய்து தேர்தல் பணிகளில் களமிறங்கியுள்ளது. வழக்கம்போல் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
இந்த வரிசையில் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கிய விஜய், முதல் முறையாக 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட தீவிரமாக தயாராகி வருகிறார். தனது கட்சியின் மாவட்ட செயலாளர்கள், கட்சியின் அணிகள், நிர்வாகிகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இன்று தமிழக வெற்றிக் கழகம் கட்சியின், ஐ.டி.விங் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கவில்லை.
அதே சமயம், இந்த கூட்டத்தின் போது விஜய் வீடியோ கால் மூலமாக பேசுவதாக இருந்தது. ஆனால் அதுவும் நடக்காத நிலையில்,விஜய் வீடியோ ரெக்கார்டு செய்து பேசிய காட்சி ஒளிபரப்பட்டது. அந்த வீடியோவில்,"மீட்டிங்க் நடக்கும் போதே உங்களிடம் பேச வேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால் இங்க கொஞ்சம் நெட்வொர்க் பிராப்ளம். அதனால் தான் என்னால் அப்படி செய்ய முடிவில்லை. அதனால் தான் வீடியோ ரெக்கார்டு செய்து அனுப்பியிருக்கிறேன். உங்க எல்லாரையும் சந்திப்பதில் ரொம்ப சந்தோஷம்.
நம்முடைய இந்த சோஷியல் மீடியா படையை தான் இந்தியாவிலேயே மிகப்பெரும் படையாக சொல்கிறார்கள். இதனை நம்ம சொல்கிறதை விட மற்றவங்களே பார்த்து சொல்றாங்க.. இனிமேல் நீங்க எல்லாரும் சோஷியல் மீடியா பேன்ஸ் மட்டும் கிடையாது. என்ன பொறுத்தவரைக்கும் நீங்கள் எல்லாரும் நம் கட்சியுனுடைய விர்ச்சுவல் வாரியர்ஸ் (VIRTUAL WARRIORS).
த.வெ.க ஐ.டி விங் நிர்வாகிகளுக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், காணொளி காட்சி வாயிலாக அறிவுரை வழங்கினார் @TVKVijayHQpic.twitter.com/SQIsADbRx8
— Thamaraikani (@kani_twitz24) April 19, 2025
இப்படித்தான் உங்கள் எல்லாரையும் இனி கூப்பிட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நம்முடைய தமிழக வெற்றிக் கழக ஐ.டிவிங் என்று சொன்னாலே, கண்ணியத்தோடு நடந்துகொள்பவர்கள் என்று எல்லாரும் சொல்லும் வகையில் மாதிரி நீங்க நடந்துகொள்ள வேண்டும். கூடிய விரைவில் உங்களை நான் பார்க்க வருகிறேன். அதுவரைக்கும் உங்க எல்லாருக்கும் என்னுடைய ஆல் தி பெஸ்ட்.. வெற்றி நிச்சயம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.