Coimbatore, Madurai, Trichy News: அ.தி.மு.கவின் திட்டங்களை தி.மு.க முடக்கியது - நாமக்கலில் இ.பி.எஸ் பேச்சு

Coimbatore, Madurai, Trichy News Live- 9 October 2025: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

Coimbatore, Madurai, Trichy News Live- 9 October 2025: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
eps

மேலும், “முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் ஏன் கேட்கப்படவில்லை. பாதுகாப்பு ஏற்பாடு குறித்து எஸ்.பி கூட்டம் போட்டாரா? மேலும் மேலும் மக்களைக் கூட்டப் பகுதியில் அனுமதித்தது ஏன்? கரூர் சம்பவம் ஒரு விபத்து என்றோ, எதிர்பாராமல் நடந்தது என்றோ கூற முடியாது” என்ற ஆங்கில நாளேட்டை சுட்டிக்காட்டி இ.பி.எஸ் பதிவிட்டுள்ளார்.

மருந்து தயாரிப்பு நிறுவன உரிமையாளர் சென்னையில் கைது

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் மருந்து தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் ரங்கநாதன், இருமல் மருந்து குடித்த 20 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில்  சென்னை அசோக் நகரில் மத்தியப் பிரதேச போலீஸாரால் கைது செய்யப்பட்டார். சென்னை போலீசார் உதவியுடன் அவர் விசாரணைக்காக அவர் சுங்குவார்சத்திரம் அழைத்துச் செல்லப்பட்டார்.

Advertisment

10.10 கி.மீ நீளத்தில் கோவை - அவிநாசி சாலை மேம்பாலம் திறப்பு

கோவை உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கி.மீ தூரத்துக்கு கட்டப்பட்ட அவிநாசி சாலை புதிய உயர்மட்ட மேம்பாலத்தை வரும் 9-ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

தமிழக மீனவர்கள் 47 பேர் கைது

ராமேஸ்வரம் அடுத்த தலைமன்னார் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 47 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். 5 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது.

Advertisment
Advertisements
  • Oct 10, 2025 07:02 IST

    பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு குறைந்தது

    பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு குறைந்ததால், கோபிச்செட்டிப்பாளையம் கொடிவேரி அணையில் சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.



  • Oct 09, 2025 22:23 IST

    அரசுப் பேருந்து - கார் மோதி விபத்து

    புதுக்கோட்டை அருகே கேப்பரை என்ற இடத்தில் அரசுப் பேருந்து - கார் மோதிய விபத்தில், காரில் இருந்த அறந்தாங்கி நீதித்துறை நடுவர் நீதிபதி சக்தி நாராயண மூர்த்தி நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.



  • Oct 09, 2025 22:02 IST

    "மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்" - ஈபிஎஸ் உரை

    காவிரியில் இருந்து சுத்தமான நீர் கிடைக்க அதிமுக ஆட்சி அமைந்ததும் ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது. அதிமுகவின் திட்டங்களை திமுக அரசு முடக்கியது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசு எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் விற்பனை அமோகமாக நடக்கிறது. அதிமுக ஆட்சிக்கு வந்தால் போதைப்பொருள் நடமாட்டம் தடுத்து நிறுத்தப்படும் எனநாமக்கலில்  எடப்பாடி பழனிசாமி உரையாற்றியுள்ளார்.



  • Oct 09, 2025 20:55 IST

    ரேபிஸ் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர் உயிரிழப்பு

    திருவண்ணாமலைமாவட்டம்கீழ்பென்னாத்தூர்அருகேநாய்கடித்ததில்ரேபிஸ்தொற்றுபாதிக்கப்பட்டுஅரசுமருத்துவமனையில்சிகிச்சையில்இருந்தஜான்ஆண்ட்ரூஸ்என்பவர்பரிதாபமாகஉயிரிழந்தார். இந்தஆண்டுமட்டும்திருவண்ணாமலைமாவட்டத்தில் 10,479 நாய்கடிசம்பவம்நடந்துள்ளதாகவும் 3 பேர்ரேபிஸ்நோயால்உயிரிழந்துள்ளதாகவும்மாவட்டஆட்சியர்தகவல்தெரிவித்துள்ளார்.

     



  • Oct 09, 2025 20:18 IST

    ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தாக்கப்பட்ட வழக்கில் த.வெ.க. சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் கைது

    கரூர் கூட்டத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தாக்கப்பட்ட வழக்கில் த.வெ.க சேலம் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றக் காவலில் அடைப்பதற்காக கரூர் நீதிமன்றத்திற்கு அவர் அழைத்து வரப்பட்டுள்ளார்.



  • Oct 09, 2025 19:46 IST

    கடையநல்லூர் நகரப் பகுதியில் தொடரும் தெரு நாய்கள் தொல்லை: 2 நாட்களில் 35 பேர் பாதிப்பு

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகரப் பகுதியில் தொடரும் தெரு நாய்கள் தொல்லையால் 2 நாட்களில் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாய்க் கடிபட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



  • Oct 09, 2025 18:39 IST

    ராமேஸ்வரம் மீனவர்கள் 47 பேர் கைது -  ஜவாஹிருல்லா கண்டனம்

    இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் 47 பேர் கைது செய்யப்பட்டதற்கு ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். மீனவர்கள் மீதான தொடர் தாக்குதல் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானதாகும். தமிழ்நாட்டின் கடலோர மக்களின் உயிர், வாழ்வாதாரத்தை பாதுகாப்பது ஒன்றிய அரசின் கடமை. மீனவர்களை துன்புறுத்தலுக்கு ஆளாக்கும் இலங்கை படையின் கொடுமையை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.



  • Oct 09, 2025 17:45 IST

    ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கியதாக புகார்: த.வெ.க சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் கைது

    ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தவெக சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டுள்ளார்.  தனது உணவகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது நேரடியாக  சிறப்பு புலனாய்வு குழு வந்து அவரை கைது செய்து அழைத்துச் சென்றது. ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் வெங்கடேசனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது,



  • Oct 09, 2025 17:14 IST

    கரூர் துயர சம்பவ வழக்கு -உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

    கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கை எஸ்ஐடி விசாரிக்க இடைக்கால தடை கோரி மதுரையைச் சேர்ந்த ரமேஷ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கூடுதல் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறியுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மனுக்களை தள்ளுபடி செய்த நிலையில், வழக்கை எஸ்ஐடி விசாரிக்க இடைக்கால தடை கோரி மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.



  • Oct 09, 2025 16:22 IST

    விசாரணைக்கு அழைத்துச் சென்ற இளைஞர்  - கால்வாயில் விழுந்து பலி

    மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த தினேஷ், அஜித் கண்ணா, பிரகாஷ் ஆகிய மூவரையும் விசாரணைக்காக போலீசார் அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் போது தினேஷ் திடீரென தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. போலீசாரிடமிருந்து தப்பி ஓடிய அவர் அருகிலிருந்த கால்வாயில் குதித்ததால் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக  விசாரணை நடைபெற்று வருகிறது.



  • Oct 09, 2025 16:21 IST

    தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் இருந்த பள்ளி மூடல்

    வேலூர், காங்கேயநல்லூரில் உள்ள கட்டடத்தின் மேல் தளத்தில் இருந்த ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், கட்டடத்தின் தரைதளத்தில் செயல்பட்டு வரும் தனியார் பிளே ஸ்கூலில் இருந்த குழந்தைகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதனிடையே, சம்பவ இடத்தில் மாவட்ட பள்ளி கல்வித்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில், பிளே ஸ்கூல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது,



  • Oct 09, 2025 16:18 IST

    கரூர் துயர சம்பவம் - கரூர் த.வெ.க மாவட்ட செயலாளரை விசாரிக்க 2 நாட்கள் அனுமதி

    விஜய் பங்கேற்று பேசிய கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள த.வெ.க கரூர் மாவட்ட செயலாளர் மதியழகனை காவலில் எடுத்து விசாரிக்க 2 நாட்கள் அனுமதி எஸ்.ஐ.டி-க்கு அளித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, 



  • Oct 09, 2025 15:12 IST

    “தடையற்ற போக்குவரத்தை உறுதிசெய்திருக்கும் திராவிட மாடல்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

    கோயம்புத்தூரில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது தமிழ்நாட்டின் மிக நீளமான 4 வழித்தட ஜி.டி.நாயுடு உயர்மட்ட மேம்பாலம் தென்னிந்திய மான்செஸ்டரின் நுழைவுவாயிலாம் அவினாசி சாலையில் தடையற்ற போக்குவரத்தை உறுதிசெய்திருக்கும் திராவிட மாடல் என்று மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 



  • Oct 09, 2025 15:09 IST

    மதுரை வந்துள்ள தோனிக்கு, விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

    ரூ.360 கோடி செலவில் கட்டப்பட்ட பிரமாண்ட கிரிக்கெட் மைதானத்தை திறந்துவைக்க மதுரை வந்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு, விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு மதுரை விமான நிலையத்திலிருந்து, வெள்ளை நிறம் கொண்ட 7777 என்ற எண்ணிட்ட காரில் நிகழ்ச்சிக்குப் புறப்பட்டார் தோனி. 



  • Oct 09, 2025 15:08 IST

    விஜய் கரூருக்கு சென்றால் மீண்டும் தள்ளுமுள்ளு ஏற்படும் - நயினார் நாகேந்திரன்

    விஜய் கரூருக்கு சென்றால் மீண்டும் தள்ளுமுள்ளு ஏற்படும்; அப்போது அவர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் என்ன செய்வது என்று நெல்லையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டியளித்துள்ளார். 



  • Oct 09, 2025 15:07 IST

    கரூர் துயரச் சம்பவம்: மதியழகனை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க மனுத் தாக்கல்!

    நீதிமன்றக் காவலில் உள்ள தவெக கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகனை 5 நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க, கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு மனுத் தாக்கல் செய்துள்ளது.



  • Oct 09, 2025 14:52 IST

    மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கணவன்

    கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கணவன். தப்பியோட முயன்ற இளைஞரை பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர் மக்கள்



  • Oct 09, 2025 14:24 IST

    தடுப்புச் சுவர் இன்றி கழிவறை - 2 அலுவலர்கள் சஸ்பெண்ட்

    தஞ்சை, ஆடுதுறை அரசு பள்ளியில் தடுப்பு சுவர் இன்றி கட்டப்பட்ட கழிவறை. ஆடுதுறை பேரூராட்சி இளநிலை பொறியாளர், செயல் அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 



  • Oct 09, 2025 14:14 IST

    திருச்செந்தூர் முருகன் கோயிலில் அக்டோபர் 27ல் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி

    திருச்செந்தூர் முருகன் கோயிலில் அக்டோபர் 27ல் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என்று தூத்துக்குடி ஆட்சியர் இளம் பகவத் தகவல் தெரிவித்துள்ளார். அக். 22ம் தேதி யாகசாலை பூஜையுடன் திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா தொடங்குகிறது. சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 4,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்



  • Oct 09, 2025 13:40 IST

    மதுரை அமச்சியாபுரம் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு சம்பவம்: கலெக்டர் விளக்கம்

    மதுரை, அமச்சியாபுரம் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த சம்பவத்தில், குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தது அதே கிராமத்தை சேர்ந்த சிறுவன் தவறுதலாக செய்தது என மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்தார். மேலும், சம்பந்தப்பட்ட சிறுவனிடம் விசாரணை நடத்தப்பட்டு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட ஆட்சியர் உறுதி கூறினார்.



  • Oct 09, 2025 13:38 IST

    கோவையில் தங்க நகை பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார் ஸ்டாலின்

    கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் சுமார் ரூ.126 கோடியில் அமையவுள்ள தங்க நகை பூங்காவிற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். மொத்தம் 1.40 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்படவுள்ள இந்த தங்க நகை பூங்காவில், ஆரம்ப கட்டமாக 5 தளங்களுடன் தங்க நகை தொழில் தொடங்கும். இந்த பூங்காவில் 300 தொழிற்கூட அலகுகள், பாதுகாப்புப் பெட்டகங்கள் மற்றும் பொது வசதி மையம் உள்ளிட்டவை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Oct 09, 2025 13:35 IST

    தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

    தமிழ்கத்தில் இன்று (09.10.2025) காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு  உள்ளதாக வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ஈரோடு, தேனி, கோவை மாவட்ட மலைப்பகுதியில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Oct 09, 2025 12:52 IST

    ‘விஜய் கரூருக்கு போயிருந்தால் அவர் உயிருக்கு யார் உத்தரவாதம் கொடுப்பது?’ - நயினார் நாகேந்திரன்

    திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “விஜய் கரூருக்கு போயிருந்தால் அவர் உயிருக்கு யார் உத்தரவாதம் கொடுப்பது? 41 பேரை அடித்து கொன்னாங்க... மிதித்து கொன்னாங்க... அதே மாதிரி அவரையும் யாராவது எதாவது பண்னிவிடக்கூடாது என்பதற்காகத்தான் பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்திருக்கிறார்கள். அரசாங்கம் பாதுகாப்பு கொடுத்து அவர் அங்கே மக்களைப் போய் சந்திக்க வேண்டும்.” என்று கூறினார்.



  • Oct 09, 2025 12:30 IST

    மதுரை மேயரின் கணவர் பொன்வசந்தத்திற்கு ஜாமின் - கோர்ட் உத்தரவு

    மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி சொத்துவரி முறைகேடு வழக்கில், கைதாகி சிறையில் இருந்த மதுரை மேயரின் கணவர் பொன்வசந்தத்திற்கு ஜாமின் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.



  • Oct 09, 2025 12:02 IST

    ஜி.டி.நாயுடு மேம்பாலம் திறப்பு

    கோவை அவிநாசியில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாட்டின் மிக நீளமான மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்.

    ரூ.1791 கோடியில், 10.10 கி.மீ தொலைவு, 304 தூண்கள், 610 மின் விளக்குகள் கொண்டது இப்பாலம்.



  • Oct 09, 2025 12:00 IST

    உதகையில் வளர்ப்பு நாய்களை வேட்டையாடி வரும் சிறுத்தை

    நீலகிரி: உதகையில் வளர்ப்பு நாய்களை வேட்டையாடி வரும் சிறுத்தை, இடம் மாறிக் கொண்டே இருப்பதால் மக்கள் அச்சம். சிறுத்தையை பிடிக்க, தற்போது வண்டிச்சோலை பகுதியில் கூண்டு வைத்து காத்திருக்கின்றனர் வனத்துறையினர். இதுவரை இந்த சிறுத்தை 20-க்கும் மேற்பட்ட நாய்களை வேட்டையாடி சென்றுள்ளது.



  • Oct 09, 2025 11:46 IST

    இந்த சிறப்பான மாநாட்டை ஏற்பாடு செய்துள்ள ஸ்டாலினுக்கு நன்றி -உகாண்டா அமைச்சர்

    தமிழ்நாடு அரசு முன்னெடுப்பில் நடைபெறும் உலக புத்தொழில் மாநாட்டில் கலந்துகொள்வதில் பெருமை. உலக முதலீட்டாளர்களை அழைத்து இந்த சிறப்பான நிகழ்வை ஏற்பாடு செய்துள்ள முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், அமைச்சர்களுக்கும் பாராட்டுகள்

    - கோவையில் நடைபெறும் புத்தொழில் மாநாட்டில் உகாண்டா அமைச்சர் மோனிகா முசெனெரோ பேச்சு



  • Oct 09, 2025 11:38 IST

    6 மடங்கு உயர்ந்த புத்தொழில் நிறுவனங்கள்: ஸ்டாலின் பெருமிதம்

    2,032 ஆக இருந்த புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் 12,000 ஆக உயர்ந்துள்ளது. 

    12,000 புத்தொழில் நிறுவனங்களில் பாதிக்கு மேல் பெண்கள் தலைமை வகிக்கின்றனர்; புத்தொழில் நிறுவனங்களில் கடைசி இடத்தில் இருந்த தமிழ்நாடு, 4 ஆண்டுகளில் முதலிடத்தை பிடித்தது - கோவையில் நடைபெற்ற உலகப் புத்தொழில் மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேச்சு



  • Oct 09, 2025 10:53 IST

    தமிழ்நாட்டில் இனி கட்டப்படும் பாலங்களுக்கு இந்தப் பாலம் ஒரு மாடல்

    ஜெர்மன் டெக்னாலஜி, பசுமைக்கு முக்கியத்துவம், பயணத்துக்கான விசாலமான சாலை, ஒலி மாசு இல்லாத சாலை பயணம், மழை நீர் சேகரிப்புத் தொட்டிகள்.. தமிழ்நாட்டில் இனி கட்டப்படும் பாலங்களுக்கு இந்தப் பாலம் ஒரு மாடலாக இருக்கும் என நம்புகிறோம். 

    கோவை அவினாசி மேம்பாலத்தின் சிறப்பம்சங்களை பட்டியலிட்ட நெடுஞ்சாலை சிறப்புத் திட்டங்கள் கோட்டப் பொறியாளர் சமுத்திரக்கனி



  • Oct 09, 2025 10:51 IST

    உலக புத்தொழில் மாநாட்டை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்

    கோவையில் உள்ள கொடிசியா அரங்கில் உலகப் புத்தொழில் மாநாட்டை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின். உலகின் முன்னணி ஸ்டார்ட் அப் மையங்களுடான் தமிழ்நாட்டைச் சேர்ந்த நிறுவனங்களை இணைக்கவும், புதிய சந்தை வாய்ப்பை ஏற்படுத்தும் 2 நாட்கள் கோவை யில் மாநாடு நடைபெற உள்ளது.



  • Oct 09, 2025 10:48 IST

    ஸ்டாலின் கோவை வருகை: கழிவுநீர்க் கால்வாய்கள் பச்சை நிற திரை கொண்டு மறைப்பு

    பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மு.க.ஸ்டாலின் கோவை சென்றுள்ள நிலையில், கொடிசியா அருகே சுத்தம் செய்யப்படாத கழிவுநீர்க் கால்வாய்கள் பச்சை நிற திரை கொண்டு மறைக்கப்பட்டுள்ளன



  • Oct 09, 2025 10:21 IST

    நடை பயிற்சி சென்ற உதயநிதி உடன் செல்ஃபி எடுத்த மக்கள்

    திண்டுக்கல்லில் உதயநிதி ஸ்டாலின் நடை பயிற்சி மேற்கொண்ட போது மக்கள் ஓடி வந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

    Video: Sun News



  • Oct 09, 2025 10:20 IST

    நஞ்சு போன கூட்டணி: இபிஎஸ் பேச்சுக்கு அமைச்சர் எ.வ.வேலு பதிலடி

    கோவை: இபிஎஸ் அமைக்கும் கூட்டணி வலுவான கூட்டணியா இல்லை, நஞ்சு போன கூட்டணியா என ஜோசியம் சொல்ல முடியாது. 

    அதிமுக வலுவான கூட்டணி அமைக்கும் என்ற இபிஎஸ் பேச்சுக்கு அமைச்சர் எ.வ.வேலு பதிலடி



  • Oct 09, 2025 10:20 IST

    ரயிலில் ஐடி ஊழியரிடம் சில்மிஷம்

    சேலத்தில் ஓடும் ரயிலில் ஐடி ஊழியரிடம் சில்மிஷம் செய்த புகாரில், ஆந்திராவைச் சேர்ந்த டெக்ஸ்டைல்ஸ் அதிபர் சங்கர் என்பவரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். சக பயணிகள் அவரைப் பிடித்து ஒப்படைத்தனர்.



  • Oct 09, 2025 09:59 IST

    மதுரை விமான நிலையத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

    மதுரை விமான நிலையத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து மோப்ப நாய் உதவியுடன் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.



  • Oct 09, 2025 09:47 IST

    தங்க நகைப்பூங்காவுக்கு இன்று அடிக்கல்

    கோவை குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் ரூ.81 கோடி மதிப்பில் 5 தளங்களுடன் அமைக்கப்படவுள்ள தங்கநகை பூங்கா திட்ட பணிகளுக்காக தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் சார்பில் இன்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.



  • Oct 09, 2025 09:45 IST

    கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு!

    மேம்பாலத்தை திறக்க கோவை சென்ற முதலமைச்சர் மு. க.ஸ்டாலினுக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.



  • Oct 09, 2025 09:44 IST

    நீலகிரி மழைப்பதிவு நிலவரம்

    நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரியில் கடந்த 24 மணி நேரத்தில் 13 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கோடநாட்டில் 4.7 செ.மீ, பந்தலூரில் 1.7 செ.மீ கிண்ணக்கொரையில் 1.6 செ.மீ, சேரங்கோட்டில் 1.3 செ.மீ மழையும் பதிவாகி உள்ளன.



Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: