உளுந்தூர்பேட்டை அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா வேன் மரத்தின் மீது மோதிய விபத்தில், 6 பேர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்த நிலையில், 16 பேர் காயமடைந்துள்ளனர்.
செங்கல்பட்டு அருகே உள்ள மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சிலர் சுற்றுலா வேன் எடுத்துக்கொண்டு திருச்செந்தூர் சென்றுள்ளனர். கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் ஊர் திரும்பி வந்துகொண்டிருந்தபோது, வேன், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேட்டத்தூரில் சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், வேனில் பயணித்த 2 பெண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 16 பேர் விபத்தில் படுகாயமடைந்துள்ளனர். அருகில் இருந்தவர்கள் இவர்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்ததை தொடர்ந்து தற்போது அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்செந்தூர் கோவில்க்கு சென்றுவிட்டு திரும்பும்போது ஏற்பட்ட விபத்தில், 6 பேர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்த நிகழ்வு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனமழை காரணமாக வேன் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“