/tamil-ie/media/media_files/uploads/2020/06/3-5.jpg)
Tamilnadu unlock conditions
Tamilnadu unlock conditions : இன்று (ஜூன் 8) முதல் தமிழகத்தில் புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகிறது. கடைகளுக்கு, ஹோட்டல்களுக்கு, வணிக வளாகங்களுக்கு செல்ல தயாராகும் மக்கள் இந்த அனைத்து விதிகளை கடைப்பிடிப்பது மிக மிக அவசியம். தமிழக அரசின் விதிமுறைகளை தெரிந்து கொண்டு செல்வதும் நல்லது.
தமிழகம் முழுவதும் இன்று முதல் அனைத்து கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே போல் 50% கூட்டத்துடன் ஹோட்டல்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடைகளுக்கு செல்பவர்கள், கடை ஊழியர்கள் கடைப்பிடிக்க தமிழக அரசு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
வட சென்னையில் கொரோனா 'ஹாட் ஸ்பாட்'-டாக மாறிய சிறுவர் பள்ளி: 35 பேர் பாதிப்பு
1. கடை ஊழியர்கள் அடிக்கடி கண், மூக்கு மற்றும் வாய் பகுதியை தொடக்கூடாது.
2. கடையின் தரைத்தளத்தை தினமும் பத்து முறை சுத்தம் செய்ய வேண்டும் .
3. கடை வாசலில் கைகழுவும் வசதி கண்டிப்பாக இருக்க வேண்டும். காய்ச்சல் இருமல் சளி உள்ள வாடிக்கையாளர்களை ஊழியர்கள் கடைக்குள் அனுமதிக்கக்கூடாது.
4. கிருமி நாசினி வசதியை கடைகள் அனைத்திலும் ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
5. கடைகளுக்கு வெளியே மக்கள் வரிசையில் நிற்க இடைவெளி விட்டு வட்ட முறையை பின்பற்ற வேண்டும்.
6. கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற இடங்களில் கடைகள், ஹோட்டல்கள் இயங்கும்.
7. மாஸ்க் அணிவது கட்டாயம். மாஸ்க் இல்லாத நபர்களுக்கு பொருட்கள் விற்க கூடாது.
8. காய்கறிகள் கடைகளின் எல்லா பொருட்களையும் தொடுவதை தவிர்க்க வேண்டும்.
9. கடை ஊழியர்கள் மாஸ்க் அணியாமல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். சரியான சமூக இடைவெளியை மக்கள் கடைகளில் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுருத்தப்பட்டுள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.