Tamilnadu urban local body election photo gallery: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், இந்த தேர்தல் தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 139 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளில் கவுன்சிலர்களை தேர்வு செய்வதற்காக பத்தாண்டுகளுக்கு பிறகு நடக்கிறது.
இதில் 218 பேர் போட்டியின்றி கவுன்சிலர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனையடுத்து மீதமுள்ள, 21 மாநகராட்சிகளில் 1,374 வார்டுகளில் 11,196 வேட்பாளர்களும், 138 நகராட்சிகளில் 3,843 வார்டுகளில் 17,922 வேட்பாளர்களும் மற்றும் 490 பேரூராட்சிகளில் 7,609 வார்டுகளில் 28,660 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
இதையும் படியுங்கள்: ஹிஜாப்பை அகற்றுங்கள்… இஸ்லாமிய பெண்ணிடம் பாஜக பூத் ஏஜென்ட் வாக்குவாதம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்
வாக்கு சாவடி மையங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கடைபிடிக்கப்படுகின்றன.
வாக்காளர்களுக்கு, சானிடைசர் மூலம் கை கழுவும் வசதி, உடல் வெப்ப சோதனை உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் மூலம் வாக்காளர்கள், கொரோனா அச்சமின்றி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாக்கு சாவடிகளில், வாக்காளர்கள் தங்களின் வாக்காளர் பட்டியல் எண்ணை தெரிந்துக் கொள்ள ஏதுவாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை தேனாம்பேட்டையில் உள்ள வாக்கு சாவடி மையத்தில் பதிவு செலுத்தினார்
தூத்துக்குடி எம்.பி., கனிமொழி தனது வாக்கினை செலுத்தினார்
நடிகர் விஜய் காலையிலே, சிவப்பு நிற காரில் வந்து, நீலாங்கரையில் உள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil