Advertisment

தமிழகத்தில் 13% கோவாக்சின், 9% கோவிஷீல்டு தடுப்பூசிகள் வீண்

Tamil Nadu reported vaccine wastage: மத்திய அரசு வழங்கிய கொரோனா தடுப்பூசியை வீண் செய்த மாநிலத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

author-image
WebDesk
New Update
தமிழகத்தில் 13% கோவாக்சின், 9% கோவிஷீல்டு தடுப்பூசிகள் வீண்

கொரோனா தடுப்பூசியை வீணடித்ததில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக டெல்லி உயர்நீதிமன்றம் கூறிய பிறகு எதிர்க்கட்சிகள் தமிழக அரசை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், அதனை கட்டுபடுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேசமயத்தில், இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது

Advertisment

இந்நிலையில், மத்திய அரசு வழங்கிய கொரோனா தடுப்பூசியை வீண் செய்த மாநிலத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக ஆர்டிஐ (தகவல் அறியும் உரிமை சட்டம்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 12.10 சதவீதமும், அரியானாவில் 9.74 சதவீதமும், பஞ்சாபில் 8.12 சதவீதமும், மணிப்பூரில் 7.8 சதவீதமும், தெலுங்கானாவில் 7.55 சதவீத தடுப்பூசி டோஸ்கள் வீணாகியுள்ளன. மாநில பொது சுகாதாரத்துறை இயக்குநரகத்தின் தரவுகளின்படி , 13 சதவீத கோவாக்சினும் 9 சதவீத கோவிஷீல்டு தடுப்பூசிகளும் வீணாகி உள்ளது.

மாநில புள்ளிவிவரங்களின்படி, ஜனவரி 16 முதல் ஏப்ரல் 17 வரை 7.14 லட்சம் டோஸ் கோவாக்சின் மற்றும் 44.80 லட்சம் டோஸ் கோவிஷீல்ட் மருந்து கடைகளுக்கு அனுப்பப்பட்டன. இந்த குப்பியை திறந்ததும், 2 டிகிரி செல்சியஸ் முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலையில் சேமிக்க வேண்டும் .நான்கு மணி நேரத்திற்குள் பயன்படுத்த வேண்டும். ஏப்ரல் 17ஆம் தேதி வரை மாநிலத்தில் 40.5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் உட்பட 47.05 லட்சம் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டது. மீதமுள்ள பயன்படுத்த முடியாத குப்பிகளாக சேமிக்கப்படுபவை வீணான அளவுகளாகும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

ஆரம்ப நாட்களில் நிறைய நபர்கள் தடுப்பூசிகள் போட தயக்கம் காட்டி தவிர்த்து வந்தனர். முடிந்தவரை அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போடுமாறு சுகாதார ஊழியர்களுக்கு அழுத்தம் இருந்தது. இதனால் 20 மற்றும் 10 டோஸ்களின் குப்பிகளை திறந்தனர். போதுமான அளவு மக்கள் இல்லையென்றாலும் 10 முதல் 20 டோஸ் வரையிலான குப்பிகளை திறந்து பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. தற்போது பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், மருந்து அளவும் அதிகரிப்பதால், தடுப்பூசி செலுத்தும் அளவையும் அதிகரிக்க வேண்டும். அவ்வாறு அதிகரிப்பதன் மூலம் தடுப்பு மருந்துகள் வீணாவது குறையும் என அமைச்சர் தெரிவித்தார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Corona Vaccine Tncorona Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment