/tamil-ie/media/media_files/uploads/2021/10/Vaiko-Seeman.jpg)
MDMK Vaiko Say About Seeman : நாம் தமிழர் கட்டசியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரணை சந்தித்தது 2 நிமிடங்கள் கூட கிடையாது அவர் ஆமைக்கறி சாப்பிட்டேன் என்று சொல்வது பொய் என்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மதிமுக பொதுச்செயலளர் வைகோ இது தொடர்பாக கூறுகையில், சீமான் பிரபாகரணை சந்தித்து இரண்டு நிமிடங்கள் கூட கிடையாது அவர் பொய் சொல்கிறார். ஆனால் தான் பிரபாகரணை சந்தித்து ஆமைக்கறி சாப்பிட்டதாகவும் பொய் சொல்கிறார். விடுதலைபுலிகள் எல்லாம் சீமான் மீதும் கடும் கோபத்தில் உள்ளனர்.
பிரபாகரணை சந்தித்த சீமான் போட்டோ எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டார். ஆனால் போட்டோ எடுக்க கூடாது என்று பிரபாகரன் சொல்லிவிட்டார். சீமான் பொய் சொல்கிறார். ஆமைக்கறி சாப்பிட்டேன் மாட்டுக்கறி சாப்பிட்டேன் ஆட்டுக்கறி சாப்பிட்டேன் என்று சொல்கிறார். இதனால் சீமான் மீது புலிகள் கடும் கோபத்தில் உள்ளனர்.
எல்லா இடத்திற்கும் சென்று புலிகள் பற்றியும் பிரபாகரணை பற்றியும் பேசி ஒன்றும் தெரியாத இளைஞர்களை தன்பக்கம் இழுக்கிறார். ஸ்டெர்லைட் ஆலையில் பணம் வாங்கிட்டார் இப்போது வைகோ நீயூட்ரினோவிடம் பணம் வாங்க தனது மகனை அனுப்பிவிட்டார் என்று சொல்லி அவர் ஆட்கள் மூலமாக காணொலியில் வெளியிட்டார். அன்றைக்கே சிவகாசி ரவி என் குடும்பத்திற்காக தீக்குளித்து இறந்துபோனார்.
இப்போது அவர் குடும்பத்தை நான்தான் பார்த்துக்கொள்கிறேன். படிக்க வைத்திருக்கிறேன். மாதா மாதம் செலவுக்கு பணம் கொடுத்திருக்கிறேன். தனது மாமாவை பற்றி இப்படி கேவலமாக காணொலி வெளியிடுகிறார்களே என்று எண்ணிய எனது மனைவியின் அண்ணன் மகன் சரவண சுரேஷ் தீக்குளித்து இறந்து போனார். என் குடும்பம் ஒரு உயிரை இழந்திருக்கிறது என்று பேசியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.