Tamilnadu News For Vanniyar Reservation : தமிழகத்தில் வன்னியர்கள் சமூகத்திற்கு வழக்கப்பட்ட 10.5 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ப்பட்ட மனு மீதான் விசாரணை இன்று நடைபெற்றது. இந்த விசாரணையில் வன்னியர் சமூகத்திற்கு ஏன் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பது குறித்து வழக்கறிஞர்கள் எடுத்தரைத்தனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுககு முன்பாக கடந்த அதிமுக ஆட்சியின் கடைசியில், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்த நிலையில், வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பாக அறிவிப்பை சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து பாஜக மற்றும் தமிழக அரசு சார்பில் டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாணை நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ் மற்றும் பிஆர் கவாய் ஆகியோர் முன்னிலையில். இன்று நடைபெற்றது. தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ராகேஷ் துவிவேதி வில்சன் கிருஷ்ணமூர்த்தி வன்னியர்கள் இடஒதுக்கீடு குறித்து வாதாடினர்.
தொடர்ந்து பாமக தரபபில் ஆஜரான வக்கீல்கள் முறையிட்ட வாதத்தில், தமிழகத்தில் வன்னியர் சமூதாய பெண்கள் 95 சதவீதம்பேர் கூலி வேலைக்கு செல்வதாகவும், பலர் இன்னமும் வாடகை வீ்ட்டில் குடியிருப்பதாகவும், வாதிட்டனர். மேலும் வன்னியர் சமூதாயம் பெரிய அளவில் இருந்தாலும், கல்வி நிலையங்கள் தொடங்கவோ, மருத்துவம் மற்றும் பொறியியல் படிக்கவோ குறைந்த அளவிலாள மாணவர்களே சேர்கின்றனர்.
பல இடங்களில் எஸ்சி எஸ்டி பிரிவினரை விட வன்னியர் சமூகதய மக்கள் மோசமாக நடத்தப்படுவதாகவும் குறிப்பிட்டுள்னர். நெல்லை மாவட்டங்களில் பல பகுதிகளில் வன்னியர்கள் சுடுகாட்டில் பிணங்களை எரிக்கும் வெட்டியான வேலை பார்ப்பதாகவும், இந்த நிலையை போக்க வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு அவசியமானது என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
பாமக நிறுவனர் எஸ்.ராமதாஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் தனது வாதத்தில், சட்டத்தை இயற்றும் முழு அதிகாரம் மாநில சட்டப்பேரவைக்கு உள்ளது., 102வது அரசியலமைப்புத் திருத்தம் சட்டத்தை உருவாக்கும் மாநில சட்டமன்றத்தின் உரிமையைப் பறிக்கவில்லை என்று வாதிட்டார்.
2018-ன் 102வது திருத்தச் சட்டம் தேசிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையத்திற்கு (NCBC) அரசியலமைப்புச் செல்லுபடியை வழங்கியது. எந்தவொரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்திற்கான சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்புகளின் (SEBC) பட்டியலை ஜனாதிபதிக்கு அறிவிக்க இந்த சட்டம் அனுமதித்தது. அதன்பின் வந்த 105வது அரசியலமைப்புத் திருத்தம், மாநிலங்களுக்கு கல்வியில் பின்தங்கிய வகுப்புகளை அடையாளம் கண்டு குறிப்பிடும் அதிகாரத்தை மீட்டெடுத்தது.
வன்னியர் ஒதுக்கீட்டை வழங்கும் 2021 சட்டம் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர் (கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு மற்றும் மாநிலத்தின் கீழ் பணிகளில் நியமனங்கள் அல்லது பதவிகள்) சட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்று மாநில அரசு முன்பு வாதிட்டது. தமிழகத்தில் 69% இடஒதுக்கீட்டிற்கு வழிவகுத்த இந்தச் சட்டம், அரசியலமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையின் கீழ் கொண்டு வரப்பட்டது.
அரசியலமைப்பின் 31 பி, ஒன்பதாவது அட்டவணையின் கீழ் சேர்க்கப்பட்டுள்ள சட்டங்கள் எதுவும் செல்லாததாகவே கருதப்படாது. ". ஒன்பதாவது அட்டவணையின் கீழ் பாதுகாக்கப்பட்ட 1994 சட்டத்தின் வரம்பிற்குள் வருவதால், 2021 சட்டத்திற்கு ஜனாதிபதியின் ஒப்புதல் தேவையில்லை என்று அரசாங்கம் கூறியது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழகம் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், அரசியலமைப்புச் சிக்கல்கள் உள்ளதால், அதிக நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்விற்கு மாற்ற வேண்டும் என்று தமிழக அரசு சார்பில், ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, கூறியிருந்தார். ஆனால் இந்த வழக்கில் சமர்பிக்கப்பட்ட தீர்ப்புகளை ஆய்வு செய்து வருவதாகவும், இந்த விவகாரத்தை பெரிய அமர்வுக்கு மாற்ற வேண்டிய தேவை இல்லை என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
தற்போது இந்த மனுக்களை பரிசீலிக்க ஒப்புக்கொண்ட உச்ச நீதிமன்றம் முன்பு வன்னியர்கள் இடஒதுக்கீட்டின் கீழ் ஏற்கனவே செய்யப்பட்ட சேர்க்கைகள் அல்லது நியமனங்கள் ரத்து செய்யப்படாது என்று கூறியுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் பிப்ரவரி 22-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.