அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில், கூட்டணி கட்சிகளின் அழுத்தங்கள் காரணமாக திருமாவளவன் பங்கேற்கவில்லை என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசியதில் தனக்கு உடன்பாடு இல்லை என்று வி.சி.க தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற நூல் வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சிறப்பு விருந்திரான பங்கேற்றிருந்தார். இந்த விழாவில் விஜய்க்கு அம்பேத்கர் கேடயம் வழங்கப்பட்டதை தொடர்ந்து விஜய் அம்பேத்கர் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்றும் வழங்கப்பட்டது. அதன்பிறகு நீதியரசர் சந்துருவுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது.
இதனிடையே நிகழ்ச்சியில் உரையாற்றிய வெற்றிக் கழக தலைவர் விஜய்,
மக்கள் உணர்வுகளை மதிக்க தெரியாத, மக்களின் அடிப்படை வசதியான பாதுகாப்பை உறுதி செய்யாத, கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி, இருமாப்புடன் 200 வெல்வோம், என்று எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு, என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை, நீங்கள் உங்கள் சுய நலனுக்காக பல வழிகளில் பாதுகாத்து வரும், உங்கள் கூட்டணி கணக்குகள் அனைத்தும், 2026-ல் மக்கள் மைனஸ் ஆக்கிவிடுவார்கள்.
அம்பேத்கர் தொடர்பான விழாவில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்துகொள்ளவில்லை. இந்த விழாவில் பங்கேற்ற அவருக்கு கூட்டணி கட்சிகளின் அழுத்தங்கள் இருக்கிறது என்று என்னால் புரிந்துகொள்ள முடிகிறது என்றாலும், அவரது மனது இனி நம்மை சுற்றியே இருக்கும் என்று விஜய் பேசியிருந்தார். அவரின் இந்த பேச்சு பெரும் வைரலாக பரவிய நிலையில், அரசியல் வட்டாரத்தில் உடனடியாக பரபரப்பான செய்தியாக மாறியது.
இது குறித்த உடனடியாக பதில் அளித்துள்ள வி.சி.க தலைவர் திருமாவளவன், திருச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கூட்டணி கட்சிகளின் அழுத்தம் காரணமாக பங்கேற்கவில்லை என்று விஜய் பேசியிருக்கிறார். அவரின் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. அதேபோல் நிகழ்ச்சியில் பேசிய ஆதவ் அர்ஜூனா கூட்டணி கட்சிகளுக்குள் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் கருத்து கூறியிருக்கிறார் என்பது உண்மை. அவரிடம் விளக்கம் கேட்போம். இது குறித்து கட்சியின் முன்னணி நிர்வாகிகளிடம் கலந்து பேசி முடிவு எடுப்போம் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“