Advertisment

மதுரையில் இயங்கிய என்னை, வட மாவட்டங்களுக்கு முதலில் அழைத்தவர் ராமதாஸ்: திருமா ஓபன் டாக்

பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் என்னை 10 நிமிடங்கள் பேச வைத்தார்.

author-image
WebDesk
New Update
Ramadoss Thiruma

டாக்டர் ராமதாஸ் - திருமாவளவன்

மதுரையில் இயங்கி வந்த என்னை வடமாவட்டங்களுக்கு அழைத்து வந்தவர் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தான் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

Advertisment

தமிழக அரசியலில் தலித் மக்களின் நலனை கருத்தில் கொண்டு இயக்கும் கட்சிகளில் முக்கியமானவது விடுதலை சிறுத்தைகள் கட்சி. தற்போது தமிழக சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தலைவர் திருமாவளவன் எம்.பி பதவியில் இருந்து வருகிறார்.

அதேபோல் சமூதாயத்தில் நடைபெறும் குற்ற செயல்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் திருமாவளவன், தவறு செய்வது தனது கூட்டணி கட்சியாக இருந்தாலும், அதற்கு தனது எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார். இதனிடையே சமீபத்திய பேட்டி ஒன்றில் மதுரை மாவட்டத்தில் இயங்கி வந்த என்னை வட மாவட்டங்களுக்கு அழைத்து வந்தவர் டாக்டர் ராமதாஸ் தான் என்று கூறியுள்ளார்.

இதில் பேசிய அவரிடம் உங்களை அரசியலுக்கு அழைத்து வந்தவர் மூப்பனாரா அல்லது ராமதாஸா என்ற கேள்விக்கு பதில் அளித்து பேசிய அவர், அரசியலில் என்னை யாரும் அழைத்து வரவில்லை. நான் அரசியலில் இருந்தேன். மதுரை மேலூரில் ஒரு மேடையில் டாக்டர் ராமதாஸை அழைத்து பொதுக்கூட்டம் நடத்தினோம். இந்த மேடையில் பேசிய அவர் திருமாவளவன் மாதிரி ஒரு தலைவர் அங்கு இல்லை. இவர் வட மாவட்டங்களுக்கு வர வேண்டும் நான் அவருக்கு துணையாக இருப்பேன் என்று பேசினார்.

நக்சல்களுக்கு நான் அடைக்கலம் கொடுத்து தங்க வைத்துள்ளேன் என்று என்னை போலீசார் கடந்தி சென்றுவிட்டனர். அப்போது மதுரையில் பெரிய கிளர்ச்சி உருவானது. இதில் மாவட்ட ஆட்சியரையே செயல்பட விடாமல் போராட்டக்காரர்கள் தடுத்துவிட்டனர். அப்போது பழ நெருமாறன் அவர்களும், பாமகவை சேர்ந்த சங்கமிநடராஜன் வள்ளிநாயகம் இவர்கள் அனைவரும் சேர்ந்து எனக்கு ஆதரவாக ஒரு பொதுக்கூட்டம் நடத்தினார்கள்.

அதன்பிறகு ரயில் மறியல் போராட்டம், அதனை கண்டித்து ஒரு ஆர்ப்பாட்டம், அதற்கு பேராசிரியர் தீரனை அனுப்பி வைத்தார். அப்போது வள்ளிநாயகம், தீரன் ஆகியோருடன் இணைந்து செயல்பட வைத்தார். அதன்பிறகு மதுரையில் இருந்து அரசியல் பண்றீங்களே, உங்கள் மாவட்டம் கடலூர் அரியலூர் தானே என்று சொல்லி என்னை வட மாநிலத்திற்கு அழைத்து வந்தார்.

என் தம்பி விபத்தில் இறந்த பிறகு அவரது படத்தை திறப்பதற்காக எனது வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது சமூகத்தை சேர்ந்த பலர் அவர் என் வீட்டுக்கு வரக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் எதிர்ப்பையும் மீறி எங்கள் வீட்டுக்கு வந்தார். சிறிது நேரம் அங்கே பேசிக்கொண்டிருந்தார். பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் என்னை பேச வைத்தார்.

அப்போது தேர்தல் புறக்கணிப்பு அரசியலில் ஈடுபட்டு வந்த என்னை தேர்தல் அரசியலுக்கு வர வேண்டும் என்றும் இல்லை என்றால் நக்சலைட்டுடன் தொடர்புபடுத்தி உங்களை தொந்தரவு செய்வார்கள் என்று என்னை தேர்தல் அரசியலுக்கு வர தூண்டிய ஒரு வழிகாட்டியாக இருப்பவர் மூப்பனார் என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Thirumavalavan Dr Ramadoss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment