சென்னை ஐகோர்ட் அருகே திருமாவளவன் கார் விபத்து: விரட்டி தாக்கப்பட்ட வழக்கறிஞர்; வீடியோ வைரல்

தாக்குதலில் பைக்கை சாலையில் தள்ளிவிட்ட நிலையில், இதனால் பயந்த வழக்கறிஞர் சாலையில் ஓடியபோது அவரை விடாமல் துரத்தி வி.சி.க.வினர் தாக்கியுள்ளனர்.

தாக்குதலில் பைக்கை சாலையில் தள்ளிவிட்ட நிலையில், இதனால் பயந்த வழக்கறிஞர் சாலையில் ஓடியபோது அவரை விடாமல் துரத்தி வி.சி.க.வினர் தாக்கியுள்ளனர்.

author-image
WebDesk
New Update
Tirumavala

சென்னை பாரிமுனையில் வி.சி.க தலைவர் திருமாவளவன் சென்ற கார் வழக்கறிஞர் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், பைக்கில் சென்ற வழக்கறிஞர், திருமாவளவன் கார் ஓட்டுநருடன் ஆவேசமாக தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment

உச்சநீதிமன்ற நீதிபதி மீது காலணி வீச முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த செயலை கண்டித்து நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறனர். அந்த வகையில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாளவன் பங்கேற்ற நிலையில், ஆர்ப்பாட்டம் முடிந்து, அவர் தனது காரில் தனது அலுவலகத்திற்கு புறப்பட்டுள்ளார்.

அப்போது சென்னை பாரிமுனையில், காரில் சென்றுகொண்டிருக்கும்போது வழக்கறிஞர் ஒருவரின் பைக்கில் எதிர்பாராதவிதமாக மோதியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர், திடீரென திருமாவளவன் கார் ஓட்டுநருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே, காரில் திருமாவளவன் இருந்ததால், விசிகவினர், வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் பைக்கை சாலையில் தள்ளிவிட்ட நிலையில், இதனால் பயந்த வழக்கறிஞர் சாலையில் ஓடியபோது அவரை விடாமல் துரத்தி வி.சி.க.வினர் தாக்கியுள்ளனர்.

மேலும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், தாக்குதலுக்கு உள்ளான வழக்கறிஞர் வி.சி.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி தனது ஆதரவாளர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளார். தன் மீதான தாக்குதல் குறித்து அவர் பார் கவுன்சிலில் வாய்வழி புகார் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பைக் மீது கார் மோதிய விபத்தில், வழக்கறிஞர் மீது வி.சி.க.வினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisment
Advertisements

இது குறித்து தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பட்டப்பகலில் அதிர்ச்சியூட்டும் வகையில், விசிகவினர் ஒரு வழக்கறிஞரைத் தாக்கியுள்ளனர். தனது பைக்கில் மோதியதாக அவர் கார் ஓட்டுநரை கேள்வி கேட்டதற்காக மட்டுமே இந்த தாக்குதல் நடந்துள்ளது. குறிப்பாக, காரில் விசிக தலைவர் திருமாவளவன் இருந்துள்ளார். இந்த செயல் முரண்பாடாக, மோசமாக்குவது என்னவென்றால் திருமாவளவன், இந்திய தலைமை நீதிபதி மீதான தாக்குதலைக் கண்டித்து நடந்த போராட்டத்தில் இருந்து அலுவலகம் திரும்பும் பயணத்தில் சிறிது நேரத்திலேயே அவரது ஆதரவாளர்கள் ஒரு வழக்கறிஞரைத் தாக்கியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

பா.ஜ.க தலைமை செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதி இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே, உங்கள் கூட்டணி கட்சியினராக உள்ள காரணத்தால், சென்னையின் இதயமாம், பாரிமுனையில் நடைபெற்ற இக்கொடுஞ்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகிறீர்களா? நான் அனைவருக்கும் முதல்வர் என்று நெஞ்சை நிமிர்த்தி கூறினீர்களே? இப்போது இப்படிப்பட்ட ரௌடி கும்பல் ஒரு தனிமனிதனை தாக்கும் போது நடவடிக்கை எடுக்க இதயம் இல்லாது மௌனம் காக்கிறீர்களே? நியாயமா? இது நியாயமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: