ஸ்டாலின் கூட்டத்தில் ஷாக்… எஸ்சி- எஸ்டி சட்டத்திற்கு முரணாக அதிமுக: விசிக புகார்

Tamil News : எஸ்சி/எஸ்டி சட்டசத்திற்கு எதிராக கருத்து தெரிவித்த அதிமுகவவிற்கு எதிரான விசிகே எம்பி ரவிக்குமார் புகார் கூறியுள்ளார்.

Tamil News Update : சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கண்காணிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் கூட்டத்தில், அதிமுக உறுப்பினர் எஸ்சி/எஸ்டி (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின், இந்த சட்டம் செயல்படுத்துவதை மேற்பார்வையிட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியின் எம்.பியுமான டி.ரவிக்குமார் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், இந்த சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக பட்டியல் சாதியைச் சேர்ந்த அதிமுக பிரதிநிதி கூறியதாகவும், அரசு ஊழியர்களின் விசாரணைக்குப் பிறகுதான் வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும் “அவர் சட்டத்தை தடம் புரளச் செய்யும் கருத்துக்களைக் கூறியதாகவும், இந்தக் கருத்துகளைச் சொல்ல அதிமுக பட்டியல் சாதியிலிருந்து ஒரு பிரதிநிதியைத் தேர்ந்தெடுத்தது அதிர்ச்சியளிக்கிறது என்றும் கூறிய அவர்,  இது அவர்களின் கண்களை குத்த அவர்களின் விரல்களையே பயன்படுத்துவது  போன்றது, ”என்றும் கூறினார்.

கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக 2013 ல், ஒரே ஒரு கூட்டத்தை நடத்தியதற்காக விமர்சித்த ரவிக்குமார் பதவியேற்ற 100 நாட்களுக்குள் கூட்டத்திற்கு தலைமை தாங்கியதற்காக முதல்வர் ஸ்டாலினை பாராட்டினார். 2009 மற்றும் 2018 க்கு இடையில் தமிழ்நாட்டில், 31 மாவட்டங்களில் 211 கிராமங்கள் கொடுமை வாய்ப்புள்ள மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu vck mp ravikumar against aiadmk for sc st act

Next Story
தியேட்டர் திறப்பு, வெளிமாநில பேருந்து சேவை… தமிழகத்தில் ஊரடங்கு மேலும் 2 வாரங்கள் நீடிப்பு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com