நான் நடத்துவது கருத்தியல் யுத்தம். இந்த யுத்தம் விடுதலை சிறுத்தைகளுக்கும் பாஜகவிற்கும் இடையிலானது. நான் சவால் விடுகிறேன். கருத்தியல் ரீதியாக மோதிக்கொள்ள தயாரா என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாளவன் பேசியுள்ளார்.
மத்திய பாஜக அரசுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட திருமாவளவன் எம்.பி. மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதோடு மட்டும்லாமல் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் பெயரை குறிப்பிடால் பேசியது தற்போது வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் திட்டமிட்டு வன்முறைகளை தூண்டுவதற்கு, சட்டம் ஒழுங்கை சீர்குளைப்பதற்கு, சமூக பதற்றத்தை உருவாக்குவதற்கு, திமுக அரசுக்கு எதிரான ஒரு நெருக்கடியை ஏற்படுத்துவதற்கு கூட்டணி கட்சிகளிடையே குழப்பத்தை உருவாக்குவதற்கு இதன் மூலம் தமிழ்நாட்டில் காலூண்றிவிடலாம் என்று கணக்கு போட்டு ஏற்கனவே திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட உத்திகளை கையாள்கிறார்கள்.
ஆளுனர் ஆர்.என்.ரவி ஒன்றும் விபரம் இல்லாதவர் இல்லை. வேண்டுமென்றே பேசுகிறார். இப்படியெல்லாம் பேச வேண்டும் என்று திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டதை பேச வேண்டும் என்று பயிற்றுவிக்கப்பட்டதை பேசுகிறார். பாஜகவை சார்ந்த ஒவ்வொருவரும் பேசும் பேச்சையும் அவர்களுடன் இருப்பவர்கள் பேசும் பேச்சையும் பாருங்கள். அவையெல்லம் வன்முறைக்கு தூண்டுவதாகத்தான் இருக்கும்.
திடீரென்று திருவள்ளுவருக்கு காவித்துணியை போர்த்துவார்கள். பெரியார் சிலையில் சாயம் பூசுகிறார்கள். திடீரென அம்பேத்கருக்கு காவி உடை உடுத்தி நெற்றியில் பட்டை இடுவது. அவரை இந்துத்துவ அடையாளமாக காட்டுகிறார்கள். இதைவிட அய்யோக்கித்தனம் வேறு என்னவாக இருக்க முடியும். இந்த தலைவர்களை எல்லாம் உயர்வாக நினைப்பவர்களை சீண்டுவதற்காகவே திட்டமிட்டு இந்த வேலையை செய்கிறார்கள்.
இந்துத்துவாவாதிகள் வரலாற்றை திரிக்கிறார்கள். அதேபோல் தமிழகத்தில் அருந்ததியர்களை வந்தேரிகள் என்று கூறி வருகிறார்கள். இது எவ்வளவு பெரிய அய்யோக்கியத்தனம். வரலாற்று முழுவதும் ஆரிய வந்தேகரிகள் என்றுதான் நாம் படித்திருக்கிறோம். உண்மையிலேயே இந்து என்ற அடையாளம் பார்ப்பனர்களை மட்டுமே குறிக்கும் சொல். அது அண்ணாமலையை குறிக்காது.
இவர்கள் விபரம் தெரியாமல் அங்கு சென்று இந்து இந்து என்று கத்திக்கொண்டிருக்கிறார்கள். விபரம் இல்லை. ஐபிஎஸ் படித்தாலும் புத்தி இல்லை. இவர்கள் பெரியார் மற்றும் அம்பேத்கரை படித்தால் நாம் செய்வது முட்டாள்தனம் நாம் இருக்க வேண்டிய இடம் திராவிட கழகம் என்று வருவார்கள். அதுவும் இல்லை என்றால் கம்யூனிஸ்ட் என்று வரவேண்டும். பாஜகவில் சேர்ந்து 10 நாட்களுக்கு பிறகு வெளியில் வந்தாலும் அவர்களை கட்சியில் சேர்த்துக்கொள்ள கூடாது.
அண்ணாமலை இந்தியாவில், பெரியாரியம், அம்பேத்கரியம் மற்றும் இந்தியாவில் சாதிகள் என்ற புத்தகத்தை படித்தால், நிச்சயமாக அவரால் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-ல் இருக்க முடியாது. வெறும் பதவிக்காக அவர் ஒட்டிக்கொண்டிருக்கிறார். உங்கள் கையில் துப்பாக்கி இருக்கிறது. ஆர்டர் போட மோடி
ஆனால் இப்போது கேட்டால் நாங்கள் பார்டரில் இருப்பவர்களை சொன்னோம். எல்லையில் இருக்கும் ராணுவ வீரர்களுக்கு ஆர்டர் போட நீங்கள் என்ன மேஜர் ஜெனரலா, நீங்கள் ஒரு சாதாரண கிளை தலைவர். இவர்கள் கவனத்தை ஈர்க்க பேசுகிறார்கள். கொள்கையை சொல்லி தமிழகத்தில் அவர்களால் தமிழகத்தில் ஒரு இடத்தில் கொடி ஏற்ற முடியுமா? விடுதலை சிறுத்தைகள் சவால் விடுகிறோம். தமிழகத்தை பொறுத்தவரை இந்த கருத்தியல் யுத்தம் விடுதலை சிறுத்தைகள் பாஜகவிற்கும் இடையிலானது.
அதேபோல் பார்ப்பனியத்தை விட கொடுமை வேறு என்ன இருக்கிறது. சிலபேர் தெலுங்கர்கள் மற்றும் கன்னடர்களை எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். என்னயா அரசியல் இது. வாட் நான்சென்ஸ் என்ன முட்டாள்தனமாக அரசியல். டெல்லியில் பார்பனியர்கள் அமர்ந்திருகிறார்கள் அவர்கள் தான் தமிழ் தேசியத்திற்கு முதல் எதிரி.
அண்டை மாநிலத்தில் இருக்கும் தெலுங்கர்களா எதிரி? தமிழகத்தில் தெலுங்கு பேசுகிறவர்களா எதிரி? இது மக்களை திசை திருப்புகிற அரசியல். இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. மோடி அதானி அம்பானி இவர்களை எதிர்ப்பதை விட்டுவிட்டு இவர்களை எதிர்க்கிறார்கள். அவர்கள் எல்லாம் முதலீட்டு வந்தேரிகள். வட இந்தியர்கள் கூலி வேலைக்கு வருகிறார்கள். அவர்களா உங்களது எதிரி?
கொள்ளையடிக்க வந்தவனை விட்டுவிட்டு கூலிக்கு வந்தவனை எதிரி என்று கூறுவது என்ன அரசியல் இது. இப்போது அண்ணன் பிரபாகரன் உயிரோடு இருகிறார் என்று சொல்கிறார்கள். நான் சொல்கிறேன். அவர் உயிருடன் இல்லை என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் அருந்ததியர்கள் வந்தேறிகள் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/