VCK Thirumavalavan Standing Chair Viral Video : விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் சிதம்பரம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் மழைநீரில் நனையாமல் நாற்காளியின் மீது நடந்து காருக்குள் ஏறிய வீடியோ தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக தலைநகர் சென்னையில் பல பகுதிகள் மழை நீரால் சூழ்ந்துள்ளன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்ககை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் மழை நீடிக்கும் என்பதால், மக்கள் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த மழை வெள்ளத்தில் சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்றான வேளச்சேரி கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது.
பொதுமக்களின் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளதால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், வேளச்சேரி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் வீட்டிலேயே வெள்ளம் புகுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் சிதம்பரம் தொகுதியின் எம்பியுமான திருமாவளவன் வேளச்சேரியில், தமிழ்நாடு குடியிறுப்பு காலணியில் முதலாவது அவன்யூவில் வசித்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக அவரது வீட்டில் தண்ணீர் புகுந்துள்ளது.
தொல் தோழர் சமூக நீதியை காக்கும் போது 🤷♂️#திருமாவளவன் #thiruma #Socialjustice pic.twitter.com/zonMMPrE9N
— அகத்தியன் (@riverinerabbit) November 29, 2021
மழை வெயில் என்று பாராமல் தினமும் குறைந்தது 500 கிலோ மீட்டர் பயணிக்கும் கால்கள்
தினம் தினம் பல மணி நேரம் பல மேடையில் நிற்கும் கால்கள் இந்த 50 மீட்டர் தூரத்தை கடக்க முடியாதா என்ன!!
போங்கடா டேய் அடிமை தனத்திற்கும் அன்பிற்கும் வித்தியாசம் தெரியாத பயலுகளா 💞pic.twitter.com/nJN71q722T— 🌾 கவிகண்ணா 🌾 (@kaviikanna) November 29, 2021
எப்படி #சமூகநீதி #சமத்துவம் அடைவது என்று சொல்லி தரும் #திருமாவளவன்.
பதவி வந்தால் தொண்டர்கள் அடிமைகளே!#TamilNaduRains #TNRain #ChennaiFlood #ChennaiRains pic.twitter.com/SOCUnAvLBY— #ProudHindu (@Jaya20012) November 29, 2021
இந்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், இந்த கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்ல புறப்பட்ட திருமாவளவன், வீட்டில் இருந்து புறப்பட்டு விமான நிலையம் செல்ல தயாராகியுள்ளார். ஆனால் கனமழை காரணமாக அவரது வீட்டில் 2 அடி உயரம் வரை தண்ணீர் தேங்கி நின்றுள்ளது. இதனால் தண்ணீரில் நடந்தால் தனது ஷூ நனைந்துவிடும் என்று எண்ணிய அவர், பார்வையாளர்கள் அமரும் நாற்காலியில் நின்று கொண்டு அதனை தனது தொண்டர்களை வைத்து இழுக்க வைத்து காரின் அருகில் அதில் வந்து ஏறி சென்றுள்ளார்.
#திருமாவளவன்
மழை நீரில் சில அடிகள் நடந்து காரில் ஏற இந்த சீன்!!
அவர் கால்கள் தரையில் படாமல் நடக்க, சக மனிதர்கள் அடிமைகள் போல்.. இது #சமூக_நீதி ?
இதை அவருடன் உள்ளோர் மீதான அவரின் ஆதிக்க உணர்வு என சொல்லலாமா அல்லது அல்ப்பம், அலப்பறைன்னு புரிந்து கொள்ளலாமா...? #Thirumavalavan pic.twitter.com/E8Vgeu4efJ— Anu Chandramouli (@anumma2002) November 29, 2021
வெள்ளம் பாதித்த பகுதிகளை திரு. திருமாவளவன் பார்வையிட்ட போது.
மேலும் மழையால் பாதித்தவர்களை காப்பாற்றிய போது.
என்ன கொடுமை சரவணன் இது. pic.twitter.com/YSU1SXDx27— Dr. Kesavan Sriram (@DrKesavanSriram) November 29, 2021
திருமா #VCK சமூக நீதி தருமா!!
மற்ற நபர்கள் அதே தண்ணீரில் நடந்து வரலாம் ஆனால் #விசிக தலைவர் திருமாவளவன் நடந்து வரமாட்டாரா??
அடிமைத்தனம் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். விழித்துக் கொள் சிறுத்தையே..#TamilNadu #Chennai #MNM https://t.co/rZ0kaWsQuk— Ela Selvan 🔦↗️ (@iElaSelvan) November 29, 2021
என்ன ஒரு அநியாயம்..
தொண்டர்களை இப்படி கொத்தடிமைகள் போல் நடத்தி வேலை வாங்குவது தான் உங்கள் சமூக நீதியா மிஸ்டர்.திருமாவளவன்? @thirumaofficial pic.twitter.com/w4zohCAlqk— முத்துராமன்.K (@Its_Muthu_Rss) November 29, 2021
இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், இந்த வீடியோவை பார்த்த பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.