ஷூ நனையாமல் சேரில் இருந்து காருக்கு தாவிய திருமா: சர்ச்சை வீடியோ

Tamilnadu News Update : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், இந்த கூட்டத்தில் பங்கேற்க திருமாவளவன் டெல்லி செல்ல புறப்பட்டு சென்றுள்ளார்.

VCK Thirumavalavan Standing Chair Viral Video : விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் சிதம்பரம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் மழைநீரில் நனையாமல் நாற்காளியின் மீது நடந்து காருக்குள் ஏறிய வீடியோ தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக தலைநகர் சென்னையில் பல பகுதிகள் மழை நீரால் சூழ்ந்துள்ளன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்ககை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் மழை நீடிக்கும் என்பதால், மக்கள் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த மழை வெள்ளத்தில் சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்றான வேளச்சேரி கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது.

பொதுமக்களின் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளதால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், வேளச்சேரி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் வீட்டிலேயே வெள்ளம் புகுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் சிதம்பரம் தொகுதியின் எம்பியுமான திருமாவளவன் வேளச்சேரியில், தமிழ்நாடு குடியிறுப்பு காலணியில் முதலாவது அவன்யூவில் வசித்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக அவரது வீட்டில் தண்ணீர் புகுந்துள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், இந்த கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்ல புறப்பட்ட திருமாவளவன், வீட்டில் இருந்து புறப்பட்டு விமான நிலையம் செல்ல தயாராகியுள்ளார். ஆனால் கனமழை காரணமாக அவரது வீட்டில் 2 அடி உயரம் வரை தண்ணீர் தேங்கி நின்றுள்ளது. இதனால் தண்ணீரில் நடந்தால் தனது ஷூ நனைந்துவிடும் என்று எண்ணிய அவர், பார்வையாளர்கள் அமரும் நாற்காலியில் நின்று கொண்டு அதனை தனது தொண்டர்களை வைத்து இழுக்க வைத்து காரின் அருகில் அதில் வந்து ஏறி சென்றுள்ளார்.

இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், இந்த வீடியோவை பார்த்த பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu vck thirumavalavan standing at chair of his home for rain water

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com