விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிகழ்ச்சியில் பேசிய பெண் நிர்வாகி ஒருவர் கட்சியின் சனாதனம் இருப்பதாகவும், ஆண் சமூகம் திருந்த வேண்டும் என்று பேசும்போது அவரது மைக் ஆஃப் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் திருமாவளவன் மணி விழா சென்னையில் நடைபெற்றது. திருமாவளவன் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், பேசிய மகளிர் விடுதலை இயக்கத்தின் மாநில செயலாளர் நற்சோனை என்பவர் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்சியில் ஆண்கள் பெண்களுக்கு பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகின்றனர். ஆண் சமூகம் இன்னும் திருந்தவில்லை. மாவட்ட நிர்வாகிகள் பெண்களை மிகவும் கெவலமாக நடத்துகிறார்கள். சனாதனத்தை எதிர்க்கின்றோம். ஆனால் இந்த கட்சியில் சனாதனம் இருக்கிறது. ஆண் சமூகம் திருந்த வேண்டும் கட்சி முழுவதும் சனாதனம் இருக்கிறது என்று அவர் பேசினார்.
தொடர்ந்து அவர் பேசிக்கொண்டே இருந்த நிலையில், அவரது மைக் ஆஃப் செய்யப்பட்டது. அவர் பேசும்போது மேடையில் அமர்ந்திருந்த திருமாவளவன் தனது ஒருவரை அழைத்து ஏதொ சொல்ல அவர் உடனே சென்று மைக்கை ஆஃப் செய்தவிட்டார். இதனால் நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து பேசிய விசிகே தலைவர் திருமாவளவன் நற்சோதனை களப்பணியில் தனக்கு ஏற்பட்ட கசப்பை இங்கே பேசியதை வரவேற்கிறேன். முரண்பாடுகள் விவாரத்திற்கு வரும்போது அதற்கு தீர்வு காண முடியும். சனாதனத்தை உடைத்து விடுதலையை ஏற்படுத்த வேண்டும், சனாதனம் வேண்டாம் என்று சொல். சமத்துவம் வேண்டும் என்று சொல்.
சனாதனம் வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டால் உடடியாக அவன் சொல்ல வேண்டியது சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்பதுதான். சனாதனம் வேண்டாம் என்று சொன்னால் அதற்கு அம்பேத்கரியம்தான் மாற்று என்று கூறியுள்ளார்.
திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து சனாதனத்திற்கு எதிராக குரல் கொடுத்து வரும் நிலையில், சனாதனத்தை வெரறுப்போம் ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்று திருமாவளவன் ஒவ்வொரு மேடைகளிலும் முழங்கி வரும் நிலையில், தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியிலேயே சனாதனம் இல்லை என்று பெண் நிர்வாகி ஒருவர் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil