Advertisment

சென்னையில் வாகனங்கள், பணியாளர்கள் இ- பாஸ் பெறுவது எப்படி?

Tamilnadu vehicle pass: நீங்கள் சென்னையில் சிக்கிக் கொண்டீர்கள் என வைத்துக் கொள்வோம். நீங்கள் உங்கள் காரில் உங்கள் சொந்த ஊருக்குச் செல்ல முடியும் என்றால், உங்களுக்கு இ-பாஸ் கொடுக்கப்படும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
e-pass restrictions, e pass in tamil nadu, இ பாஸ், தமிழகம், தமிழக செய்திகள், corona virus. Corona virus tamil news, Corona virus news in tamil, கொரோனா வைரஸ், கொரோனா தமிழ் news, கொரோனா தமிழ்நாடு, corona virus tamil nadu news, coronavirus today news in tamil, coronavirus Latest news in tamil, coronavirus Tamil nadu news, coronavirus chennai news, Corona virus outbreak, corona virus pandemic, corona virus symptoms

Tamilnadu vehicle E-pass Link:  தமிழ்நாட்டில் நோய் தடுப்பு பகுதிகள் தவிர, மற்ற பகுதிகளில் ஆரஞ்ச், பச்சை,சிகப்பு நிற மாவட்ட பகுதிகளுக்கு மத்திய அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு உட்பட்டு, தொழிற்சாலைகள் தொடங்குவது உள்ளிட்ட பல தளர்வுகளை எடப்பாடி பழனிசாமி கடந்த 2ம் தேதி அறிவித்தார்.

Advertisment

இதற்கிடையே, அறிவிக்கப்பட்ட செயல்பாடுகளுக்கு தேவைப்படும் வாகன அனுமதி சீட்டு எவ்வாறு பெறுவது என்பது குறித்து தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம்   தனது ட்விட்டர் கணக்கில் முக்கிய அறிவிப்பு  வெளியிட்டுள்ளது.

பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் பயனர்கள் இ-வாகன அனுமதி சீட்டு பெற- இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

 

தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்லும் பயனர்கள் இ-வாகன அனுமதிச் சீட்டு பெற - இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

 

தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு செல்ல பயனர்கள் இ-வாகன அனுமதிச் சீட்டு பெற - இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

 

 

யாருக்கெல்லாம் இ - வாகன அனுமதி சீட்டு வழங்கப்படும்? 

நீங்கள் சென்னையில் மாட்டிக் கொண்டீர்கள் என வைத்துக் கொள்வோம். நீங்கள் உங்கள் காரில் உங்கள்  சொந்த ஊருக்குச் செல்ல முடியும் என்றால் - உங்களுக்கு இ-பாஸ் கொடுக்கப்படும்  .

நீங்கள் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர்கள். தற்போது தமிழகத்தின் ஏதோ ஒரு மாவட்டத்தில் சிக்கக் கொண்டீர்கள். தற்போது நீங்கள் இ- அனுமதிச் சீட்டு கேட்டு விண்ணப்பிக்கலாமா?

உங்கள் பயணத்தைப் பற்றி ஆந்திர பிரேதேசம் நிர்வாகத்திடம் தெரிவிக்க வேண்டும். அவர்களிடம்  ஒப்புதல் பெற்று, சரியான ஆவணத்துடன் இ- வாகன அனுமதிச் சீட்டை பயன்படுத்த வேண்டும்.

இதற்கிடையே, திங்கள்கிழமை முதல் பணிக்கு திரும்பும், வீட்டு உதவியாளர்கள் மற்றும் சமையல்காரர்கள் அனுமதிச் சீட்டு வாங்க வேண்டும் என்று சென்னை மாநகாராட்சி தெரிவித்துள்ளது. tnepass.tnega.org  என்ற இணையதளைத்தில்  தங்கள் அனுமதிச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் பிளம்பர்ஸ், எலக்ட்ரீசியன், ஏ.சி மெக்கானிக், தச்சு வேலை செய்பவர்,  வீட்டு பராமரிப்பாளர் ஆகிய பணியாளர்களும் அதே வலைத்தளத்தில் அனுமதி சீட்டை விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மேலும், ஊரடங்கு காலத்தில் மருந்து நிறுவனங்கள், உற்பத்தி நிறுவனங்கள், தொலை தொடர்பு வங்கிகள், இதர வங்கி சேவைகள், மாற்றுத் திறநாளிகள் மற்றும் வயதனனவர்களை கவனித்துக் கொள்பவர்கள், உணவு உய்பத்தி நிறுவனங்கள் போன்றவற்றில் பணியாற்றுவர்களின் அத்தியாவசிய அனுமதிச் சீட்டுகளின்  கால அவகாசம்  வரும் 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

                                  இ-வாகன அனுமதிச் சீட்டு பெறுவது எப்படி?

மேற்கூறப்பட்ட வலை தளங்களுக்கு சென்ற பின்,

விண்ணப்பதாரர் பயணம் செய்யும் தேததிகளை மட்டுமே குறிப்பிட

வேண்டும், தவறும் பட்சத்தில்  விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

விண்ணப்பதாரரும் பயணம் செய்கிறார் என்றால்,

விண்ணப்பதாரர் பெயரும்  (Members Travelling) பயணம்

செய்வோரின் பட்டியலில் தெர்க்கப்பட தவண்டும்

தொடர்புடைய ஆவணங்களை இளணக்க தவண்டும், தவறும் பட்சத்தில்

விண்ணப்பம் நிராகரிக்கப்படும்

நமது விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டதும்,

விண்ணப்ப குறிப்பு எண்ணுடன் (SMS) குறுஞ்செய்தி மற்றும் (Email)

மின்னஞ்சல் அனுப்பப்படும் .

ePASS அங்கீகரிக்கப்பட்டதும்  ePASS பதிவிறக்க

இளணப்புடன் மற்சறாரு (SMS) குறுஞ்செய்தி அனுப்பிவைக்கப்படும்.

Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment