வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி தாக்கப்பட்ட விவகாரத்தில் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி சஸ்பெண்ட் எஸ்பி அப்துல்ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் ஆகியோரையும் சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் ஒருவரை சிறைத்துறை டி.ஐ.ஜி ராஜலட்சுமி தனது வீட்டு வேலைக்கு பயன்படுத்தியதாக புகார் எழுந்துது. இது குறித்து வழக்கு பதிவு செய்த கைதியின் தாயார், சிறையில் இருக்கும் தனது மகனை வீட்டு வேலைக்கு பயன்படுத்தி கொடுமைப்படுத்தியதாகவும், வீட்டு வேலையில் இருக்கும்போது அவர் வீட்டில் நகை, மற்றும் பணத்தை திருடியதாக குற்றம்சாட்டி அவர் மீது தாக்குதல் நடத்தியததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகாரின் பேரில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக டி.ஐ.ஜி ராஜலட்சுமி, சிறை கண்காணிப்பாளர் அப்துல் ரஹ்மான், உள்ளிட்ட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில், வேலூர் மத்திய சிறை ஜெயிலர் பணியிடை நீக்கம் செய்யப்பட் நிலையில், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்ட டி.ஐ.ஜி ராஜலட்சுமி, கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல் ரஹ்மான், ஜெயிலர் அருள் குமரன் ஆகியோர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்ட்டுள்ளனர்.
ஆயுள் தண்டனை கைதி, வீட்டு வேலைக்கு பயன்படுத்தியதும், அவர் மீது திருட்டு பழி சுமத்தி சிறையில் கொடுமை செய்த விவகாரம், தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“