வேலூர் சி.எம்.சி-யில் 200 ஊழியர்களுக்கு கொரோனா

Tamilnadu Covid Update : வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி (சிஎம்சி) மருத்துவமனையில் 200 க்கும் மேற்பட்ட மருத்துவ ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யபபட்டுளளது.

Tamilnadu Covid Update : தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய நிலையில், அரசின் தீவிர நடவடிக்கையால் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்குடன் கடுமையான கட்டப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் தமிழகத்தில் கொரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது அந்த வகையில் வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி (சிஎம்சி) மருத்துவமனையில் 200 க்கும் மேற்பட்ட மருத்துவ ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் மருத்துவமனை நிர்வாகம், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக செயல்பட்டு வருவதாக வேலூர் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி கூறியுள்ளார்.

கொரோனா தொற்றால்“பாதிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கையைக் கண்டறிய வேண்டும். ஒரு ஊழியர் அல்லது நோயாளிககு பரிசோதனையில் போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்கள் பரிசோதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு, தொற்றின் தீவிரத்தின் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிற. இதற்காக மருத்துவமகையில் தனியாக கொரோனா வார்டு அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் இருந்தாலும், அவர்களின் நோய்த்தொற்றுகள் லேசானவை, ”என்று ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார்.

வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி (சிஎம்சி) மருத்துவமனையில் 2,000 மருத்தவர்கள் உட்பட 10,500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகள் மற்றும் பங்களாதேஷ் போன்ற அண்டை நாடுகளிலிருந்தும் கூட நோயாளிகள் சிகிச்சைக்காக இந்த மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.

ஆனால் தற்போது ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள காரணத்தால், இந்த மருத்துவமனையில், சிகிச்சைகள், வெளிநோயாளிகள் (OP) வருகைகள், பிற அவசரமற்ற சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அவசர சிகிச்சை மட்டுமே வழங்கப்படுகிறது.  

வேலூர் நகர முனிசிபல் கார்ப்பரேஷன் (விசிஎம்சி) வெள்ளிக்கிழமை வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரிக்கு அருகிலுள்ள பாபு ராவ் தெருவை சேர்ந்த 6 பேர் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதியை கொரோனா ‘கட்டுப்பாட்டு மண்டலம்’ என்று மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu vellore christian medical college staff tested positive covid

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express