scorecardresearch

முசிறி: குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர் வீட்டில் விஜிலன்ஸ் ரெய்டு

முசிறி பைபாஸ் ரோட்டில் உள்ள நடராஜின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமானதாக கூறப்படும் பெட்ரோல் பங்கில் சோதனை நடத்தப்பட்டது

Raid
ஐ.டி ரெய்டு

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முசிறி பகுதி அலுவலகத்தில் கூடுதல் செயற்பொறியாளராக பணியாற்றி வருபவர் நடராஜ். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு முசிறி பைபாஸ் ரோட்டில் உள்ள நடராஜின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமானதாக கூறப்பட்ட முசிறி துறையூர் ரோட்டில் அமைந்துள்ள பெட்ரோல் பங்க்கில் லஞ்ச ஒழிப்புத்துறை துணை டி.எஸ்.பி., மணிகண்டன் தலைமையில் அதிரடி சோதனை நடந்தது. பின்னர் நடராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் இன்று லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர்கள் செந்தில்குமார், பிரசன்னா தலைமையில் நடராஜ் வீட்டில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் அந்த அதிகாரி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர்.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தரப்பில் கூறும்போது, ஏற்கனவே அவரது சொத்து மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்று விசாரணை நடந்து வருகிறது. விசாரணையின் முடிவில் விவரங்களை தெரிவிக்கின்றோம் என்றார்.

க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu vigilance raid at water drainage board engineer house in musiri