Advertisment

3 வண்ண கொடிகள் ரெடி: விஜய் எதை தேர்வு செய்தார்? த.வெ.க கொடி அறிமுகம் எப்போது?

அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் அடுத்து தனது கட்சி கொடியை அறிமுகம் செய்ய உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

author-image
WebDesk
New Update
Vijay kalvi vizha

சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்கிய நடிகர் விஜய் விரைவில், தனது கட்சியின் கொடியை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது அவரது கொடி எந்தெந்த வண்ணத்தில் இருக்கும் என்பது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் வைத்துள்ள தளபதி விஜய், பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நிலையில், கடைசியாக இவர் நடிப்பில் லியோ என்ற படம் வெளியானது. இந்த படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றிப்படம் என்றாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கததில் கோட் படத்தில் விஜய் நடித்து வருகிறார்.

வரும் செப்டம்பர் 5-ந் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில். கோட் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது, மேலும் சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்கிய விஜய் தனது கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் என்று பெயரிட்டுள்ள நிலையில், கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாக விஜய் அறிவித்துள்ளார். தற்போது கோட் படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள விஜய், அரசியல் தொடர்பான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.

விரைவில் திருச்சி அல்லது மதுரையில் விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டை நடத்துவார் என்று தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது தமிழக வெற்றிக்கழக கட்சியின் கொடி தொடர்பான தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. அதன்படி, அவரது கட்சி ஆதவாளர்கள் மற்றும் நிர்வாகிகள் இணைந்து கட்சிக்காக 3 கொடி தயார் செய்துள்ளதாகவும், இந்த மூன்றில் எதை பயன்படுத்தலாம் என்று விஜய் முடிவு செய்வார் என்றும் கூறப்படுகிறது.

இதில் கருநீலம், கரும்பச்சை மற்றும் சிகப்பு நிறத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதே சமயம், விஜய் மக்கள் இயக்கத்திற்காக பயன்படுத்தப்பட்ட வெள்ளை கொடியில் சிகப்பு சேர்த்து பயன்படுத்தவும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது, விஜய் நடித்துள்ள கோட் படம் வரும் செப்டம்பர் 5-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், அதன்பிறகு விஜய் தனது கட்சி கொடியை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Thalapathy Vijay Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment