விக்கிரவாண்டி தொகுதிக்கு கடந்த ஜூலை 10-ந் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. இதில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட திமுகவின் அன்னியூர் சிவா வெற்றி பெற்றுள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், திமுக. சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்ட புகழேந்தி வெற்றி பெற்றிருந்த நிலையில், கடந்த ஏப்ரல் 19-ந் தேதி அவர் திடீரென மரணமடைந்தார். அந்த சமயத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் நடைபெற்று வந்தால், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து கடந்த ஏப்ரல் 19-ந் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள், கடந்த ஜூன் 4-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ருந்தனர்.
இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பா.ஜக.கூட்டணியில் பா.ஜ.க சார்பில் அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா ஆகியோர் போட்டியிட்டனர். அதிமுக தேமுதிக ஆகிய கட்சிகள் இந்த இடைத்தேர்தலை புறக்கணித்தனர். கடந்த ஜூலை 10-ந் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் திமுகவின் அன்னியூர் சிவா, 124053 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பா.ம.க 2-வது இடத்திலும், நாம் தமிழர் கட்சி 3-வது இடத்தையும் பிடித்தது.
இந்த இடைத்தேர்தலில், அதிமுக போட்டியிடாததால், அதிமுகவின் ஓட்டுக்கள் திமுக பா.ம.க. மற்றும் நாம் தமிழர் கட்சிகள் பங்கிகட்டுக்கொண்டது போல் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. பிடாரிப்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 2076 வாக்குகள் பெற்றிருந்தது. தற்போது, திமுக, 1766 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், இந்த முறை, 1559 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளது.
அதேபோல், 996 வாக்குகள் பெற்றிருந்த பா.ம.க இந்த முறை 917 வாக்குகளும், 219 வாக்குகள் பெற்றிருந்த நாம் தமிழர் கட்சி 67 வாக்குகளும் அதிகம் பெற்றுள்ளது. பொன்னாங்குப்பம் பகுதியில், திமுக 1842, பா.ம.க, 1386, நாம் தமிழர் கட்சி 167 வாக்குகள் கடந்த நாடாளுமன்ற தேர்தலை விட அதிகமான வாக்குகள் பெற்றுள்ளது. இந்த பகுதியில் அதிமுக 2766 வாக்குகள் பெற்றிருந்தது.
மண்டகப்பட்டு பகுதியில் கடந்த தேர்தலில் அதிமுக 2516 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், இந்த தேர்தலில், திமுக 1568, பா.ம.க.1108, நாம் தமிழர் கட்சி 202 வாக்குகள் கடந்த தேர்தல்களை விட கூடுதலாக பெற்றுள்ளது. உலகலாம்பூண்டி பகுதியில், அதிமுக 2354 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், தற்போது திமுக 2229 வாக்குகள், பாமக 565 வாக்குகள், நாம் தமிழர்73 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளனர். வயலாமூர் பகுதியில், அதிமுக 2751 வாக்குகள் பெற்றிருந்தது.
வயலாமூர் தொகுதியில் தற்போது திமுக 1598 வாக்குகள், பா.ம.க 901 வாக்குகள் அதிகம் பெற்றிருந்த நிலையில், நாம் தமிழர் கட்சி 19 வாக்குகளை இழந்துள்ளது. சூரப்பட்டு பகுதியில் அதிமுக 3126 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், தற்போது திமுக 1537, பாமக 1477, நாம் தமிழர் 262 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது. குண்டலப்புலியூர் பகுதியில், அதிமுக 2523 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், தற்போது திமுக 1730, பா.ம.க 1019, நாம் தமிழர்151 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது.
கல்யாணம் பூண்டி பகுதியில் அதிமுக 2197 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், தற்போது திமுக 1750, பாமக 1134, நாம் தமிழர் 10 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது. சோழம்பூண்டி பகுதியில், அதிமுக 2940 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், தற்போது திமுக 2992, பாமக 556, நாம் தமிழர் 15 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது. வடக்குச்சிபாளையம் பகுதியில், அதிமுக 2520 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், தற்போது திமுக 1359, பாமக 1367, நாம் தமிழர் 91 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது.
டி.மேட்டுப்பாளையம் பகுதியில், அதிமுக 2680 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், தற்போது திமுக 2268, பாமக 754, நாம் தமிழர் 294 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது. கொட்டியாம்பூண்டி பகுதியில், அதிமுக 2886 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், தற்போது திமுக 2237, பாமக 1034, நாம் தமிழர் 69 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.