பாபு ராஜேந்திரன் விழுப்புரம்
முதலில் கிடைக்கும் வேலை நம் முதல் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி இன்று நடந்த வேலை வாய்ப்பு முகாமில் இளைஞர்கள் மத்தியில் பேசினார்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சூர்யா பொறியியல் கல்லூரியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழா இன்று துவங்கியது.
இந்த வேலைவாய்ப்பு முகாமிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சி.பழனி முகாமில் பங்கேற்ற இளைஞர்களுக்கு பணி நியமன ஆணையினை வழங்கினார். விழாவில் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா.புகழொந்தி, கல்லூரி தாளாளர் விசாலாட்சி பொன்முடி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ம.ஜெயச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்
இந்த முகாமில் இளைஞர்கள் மத்தியில் உரையாற்றிய மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சி.பழனி, கல்லூரி படிப்பை முடித்த மாணவ, மாணவிகள், அரசு, தனியார்கள், நடத்தும் வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்று முதலில் கிடைக்கும் வேலைவாய்ப்பினை பெற்று அதன்மூலம் பல நல்ல வேலை வாய்ப்பினை பெறலாம் முதலில் கிடைக்கும் வேலை நம் முதல் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்ன கலெக்டர் பழனி மாணவ மாணவிகளுக்கு அட்வைஸ் செய்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“