/indian-express-tamil/media/media_files/taqck7ZzUXysNJZaCw05.jpg)
திண்டிவனத்தில் விரைவு ரயில்கள் நிறுத்த வேண்டும் என விழுப்புரம் பாராளுமன்ற என் பெயர் ரவிக்குமார் மத்திய ரயில்வே அமைச்சருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
இந்த கடிதத்தில், திண்டிவனத்தில் காக்கிநாடா எக்ஸ்பிரஸ், வைகை எக்ஸ்பிரஸ், பல்லவன் எக்ஸ்பிரஸ் ஆகிய விரைவு ரயில்களை நிறுத்த வேண்டும் என அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் மனு அளித்தனர். திண்டிவனம் ரயில் நிலையத்தில் அந்த 3 விரைவு ரயில்களையும் நிறுத்தவேண்டும்.
ரயில் வருகை, புறப்பாடு மற்றும் கோச் நிலைகள் பற்றிய அறிவிப்புகளைக் காண்பிப்பதற்கான அறிவிப்புப் பலகைகளை நிறுவ வேண்டும். காத்திருப்பு அறைகள் மற்றும் நடைமேடைகளில் டிவிக்களை அமைக்கவேண்டும். பயணிகளுக்குக் கழிப்பறைகளை நிறுவ வேண்டும்.
திண்டிவனத்தில் விரைவு ரயில்கள் நிறுத்தக் கோரிக்கை - அமைச்சருக்குக் கடிதம்
— Dr D.Ravikumar (@WriterRavikumar) October 23, 2024
திண்டிவனத்தில் காக்கிநாடா எக்ஸ்பிரஸ், வைகை எக்ஸ்பிரஸ், பல்லவன் எக்ஸ்பிரஸ் ஆகிய விரைவு ரயில்களை நிறுத்த வேண்டும் என அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் மனு அளித்தனர்.
*திண்டிவனம் ரயில் நிலையத்தில் அந்த 3… pic.twitter.com/5VnUb5qHEI
ஒவ்வொரு நடைமேடையையும் முன்பதிவு அலுவலகம் மற்றும் பார்சல் அலுவலகத்துடன் இணைக்கும் டிராலி பாதையை அமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளையும் சேர்த்து ரயில்வே அமைச்சருக்குக் கடிதம் எழுதி அதன் நகலை அவர்களுக்கு வழங்கினேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.