இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 15 உறவினர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தென் நெற்குணம் கிராமத்தில் கடந்த 2017 மற்றும் 2019 ஆண்டு காலகட்டத்தில் தாத்தா, பாட்டி பராமரிப்பில் வளர்ந்து வந்த 7 வயது மற்றும் 9 வயது சிறுமிகளை அதே பகுதியில் வசித்து வரும் உறவினர்களான தீனதயாளன், அஜித்குமார், பிரபா, பிரசாந்த், ரவிக்குமார், அருண், மகேஷ், ரமேஷ், துரைராஜ், மோகன், செல்வம், கமலக்கண்ணன், முருகன், துரைசாமி, செல்வ, சேகர் ஆகிய 15 நபர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்துள்ளனர்.
இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட இரண்டு மாணவிகளும் பள்ளியில் சோர்வாக காணப்பட்ட நிலையில், பள்ளி ஆசிரியர் சம்பந்தப்பட்ட சிறுமிகளிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது உறவினர்கள் 15 நபர்கள் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு பிரம்மதேசம் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று போக்சோ நீதிமன்ற நீதிபதி வினோதா தீர்ப்பு வழங்கினார். அதன்படி இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த 15 நபர்களுக்கும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ32,000 அபராதம் விதிக்கப்டுவதாக பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளார். இரண்டு சிறுமிகளில் 9 வயது உடைய சிறுமி கடந்த 2019 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது).
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த 15 நபர்களும் அப்பா தாத்தா சித்தப்பா அண்ணன் ஆகிய நெருங்கிய உறவுமுறை கொண்டவர்கள் ஆகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“