விழுப்புரம் மாவட்ட காவல்துறை திண்டிவனம் உட்கோட்டம் பிரம்மதேசம் காவல் நிலைய போலீசார், 5.800 KG கஞ்சா பறிமுதல் செய்துள்ள நிலையில், இந்த வழக்கு தொடர்பான 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் பிறப்பித்த உத்தரவின் பேரில் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையில், பிரம்மதேசம் காவல் நிலைய ஆய்வாளர் பிரகாஷ், உதவி ஆய்வாளர் திரு சண்முகம் மற்றும் காவலர்கள் தலைமையில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராவணாபுரம் ஏரிக்கரை அருகே கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவல் கிடைத்துள்ளது,
இந்த தகவலின் அடிப்படையில், அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டதில் 3 நபர்கள் சந்தேகத்திற்கிடமாக நின்று நின்றுள்ளனர். அவர்களை காவல்நிலையம் அழைத்து வந்து சோதனை மேற்கொண்டத்தில் சுமார் 2 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த பொட்டலங்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம நடத்திய விசாரணையில்,அவர்கள் வெள்ளிமேடுபேட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் எங்கிருந்து, யாரிடம் இருந்து கஞ்சா வாங்கி விற்பனை மேற்கொண்டனர் என விசாரணையில் சென்னையில் இருந்து வாங்கி விற்பனை செய்வதாக கூறியுள்ளனர். இதனையடுத்து சென்னை விரைந்து சென்ற போலீசார், ராஜீவ் காந்தி மருத்துவமணை அருகே நின்று கொண்டிருந்த மேலும் இருவரை கைது செய்துனர். அவர்களிடம் இருந்து 3.800 KG என மொத்தம் சுமார் 5 கிலோ 800 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக,கார்த்திக் முரளி வயது 18, தந்தை பெயர் ஏழுமலை, மேட்டு தெரு, வெள்ளிமேடு பேட்டை, விமல் வயது 18, தந்தை பெயர் ரமேஷ், பெருமாள் கோவில் தெரு, வெள்ளிமேடு பேட்டை, பாலாஜி வயது 24, தந்தை பெயர் சிவகுமார், கீழ்மாடவீதி, தாதாபுரம், திண்டிவனம், சக்திவேல் வயது 18, தந்தை பெயர் அய்யனார், சு.காட்டேரி கிராமம், வந்தவாசி தாலுகா, திருவண்ணாமலை மாவட்டம், ஷோன் குரியன் வயது 24, தந்தை பெயர் ராஜ் குரியன், சித்திபுரா, கோட்டையம், கேரளா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5.800 kg கஞ்சா மதிப்பு ரூபாய் 1 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது..