விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூரில் வாகன சோதையில் 80 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இந்த வழக்கில், சென்னை கூடுவாஞ்சேரி சேர்ந்த 7 பேரை போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஏனாதிமங்களம் பகுதியில் மாவட்ட கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவுப்படி விழுப்புரம் உட்கோட்டம் உதவி காவல்கண்காணிப்பாளர் ரவீந்திரகுமார் குப்தா மேற்பார்வையில் திருவெண்ணெய்நல்லூர் தனிப்படையினர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்தவழியே வந்த TN13AF1553 என்ற பதிவெண் கொண்ட APE ஆட்டோவை சோதனை செய்தனது. இருந்த இருநபர்கள் கஞ்சா போதை பொருள் எடுத்துவருவதாகவும் கிடைத்த ரகசிய தகவலின் கிடைத்தது அதன் அடிப்படையில் கணேசன் மற்றும், தனம் ஆகியோரை சோதனை செய்தனது. அப்போது அவர்களிடம் இருந்து, தலா 2 கிலோ வீதம் சுமார் 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் திருவெண்ணெய்நல்லூர் அங்காளம்மன் கோவில் பின்புறம் இருந்த தமிழ், குணசேகரன், முருகன் அனந்தபுரம் தினேஷ், ஆகியோர்களிடமிருந்து தலா 2 கிலோ கஞ்சா பொட்டலங்கள் வீதம் 6 கிலோவும் கைப்பப்பட்டப்பட்டது. இவர்களை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் இவர்கள் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் சென்னை கூடுவாஞ்சேரி அருகே உள்ள மேல்கால்வாய் கிராமத்தில் இருந்த கார்த்திக், சீனுவாசன் ஆகியோரிடமிருந்து 2 கிலோ எடைகொண்ட 35 கஞ்சா பொட்டலங்கள் என மொத்தம் 70 கிலோ கஞ்சா கைப்பட்டப்பட்டது. இதன் மூலம் மொத்தம் 80 கிலோ கஞ்சா போதை வஸ்துகள் மற்றும் செல்போன்கள் ஆட்டோ கைப்பற்றபட்டு போலீசார் கைது செய்தனர்.