விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் சாலையில் அதிக ஒலி எழுப்பக் கூடிய ஏர் ஹாரன் பயன்படுத்திய பேருந்துகளை நிறுத்தி போலீசார் அறிவுரை வழங்கி ஏ ஆர் அணை கழற்றி அனுப்பினர்
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில்,துணைக் கண்காணிப்பாளர் வழிகாட்டுதல்படி விழுப்புரம் போக்குவரத்து போலீசார் தொடர்ந்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள சாலையில் போக்குவரத்து விதிமுறைகளை மதிக்காமல் முறையற்ற முறையில் இரண்டு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் சாலை ஓரம் நிறுத்துவதை தடுத்து ஒரு சில நாட்களுக்கு முன்பு இரும்பு தடுப்புகள் அமைத்து முறைப்படுத்தினார்கள்
இதைத் தொடர்ந்து போக்குவரத்து காவல் ஆய்வாளர் வசந்த். உதவி ஆய்வாளர் குமார ராஜா.விஜயரங்கன் சிறப்பு உதவ காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன், தலைமை காவலர்கள் நித்திய குமார் வினோத், அடங்கிய குழுவினர் இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள சாலையில் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக அதிக சத்தங்களை எழுப்பும் (ஏர் ஹாரன்) அடித்துக் கொண்டு பேருந்துகள் இயக்குவதாக பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சோதனைஅ மேற்கொண்டனர்.
அப்போது முறையற்ற முறையில் பொதுமக்களுக்கு இடையூறாக அதிக சத்தங்கள் எழுப்பும் (ஏர் ஹாரன்கள்) பொருத்தப்பட்ட 10க்கும் மேற்பட்ட அரசு,தனியார் பேருந்துகளை தடுத்து நிறுத்தி ஏர் ஹாரன்கள் அகற்றி பறிமுதல் செய்து தலா ஒரு பேருந்துக்கு ரூ.10,000/- என அபதாரம் விதித்தனர் தொடர்ந்து வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்துக் விதிமுறை குறித்த விழிப்புணர்வு எடுத்துரைத்தனர்* இந்த அதிரடி நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என்று பொதுமக்கள் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக மதித்து நடந்திட வேண்டும் என்றுபோக்குவரத்து காவல் துறை தெரிவித்தனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன்