விழுப்புரம் பகுதியில் ஆன்லைன் டிரேடிங்கில் பணத்தை இழந்தவர்களிடம் இன்று சைபர் கிரைம் போலீசார் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
விழுப்புரம் பகுதியில் சமீப காலங்களில் பொது மக்களை குறிவைத்து குறிப்பாக வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், மற்றும் டெலிகிராம் போன்ற சமூக ஊடக வலைதளங்களின் மூலம் தொடர்பு கொள்ளும் அடையாளம் தெரியாத நபர்கள் பங்குச்சந்தையில் பெரு நிறுவனங்களின் பெயரில் டிரேடிங்கில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டலாம், குறைந்த வட்டியில் கடன் தருவதாகக் கூறியும், பகுதிநேர வேலை மற்றும் டேட்டா என்ட்ரி டைப்பிங்க் வேலை வாய்ப்பு தருவதாகக் கூறி பணமோசடி செய்து வருகின்றனர்.
இதில் பணத்தை இழந்த விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பலரிடம் இருந்து புகார் வந்தது. அதன் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்து விரைவாக நடவடிக்கை எடுத்தனர். இழந்த பணத்தை நீதிமன்றத்தின் வாயிலாக மீட்டு கொடுக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் இந்த ஆண்டு இதுவரை ரூ.42,50,755/- ( நாற்பத்தி இரண்டு இலட்சத்து ஐம்பதாயித்து எழுநூற்று ஐம்பத்தி ஐந்து ரூபாய்) பணத்தை மீட்டு பாதிக்கப்பட்ட 35 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதை ஊக்குவிக்கும் பொருட்டு விழுப்புரம் சைபர் கிரைம் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டியதோடு மட்டுமில்லாமல் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அவர்கள் இழந்த பணத்தை மீட்ட நிகழ்ச்சி இன்று எஸ் பி தலைமையில் நடந்தது வேல்முருகன் விக்கிரவாண்டி, நவநீத கிருஷ்ணன் மேல்மலையனூர், அமிர்தலிங்கம் தளவானூர, .பச்சமுத்து வானூர், ஜெயகாந்தி, ஆண்ட்ரூ கீழ்பெரும்பாக்கம் ஆகியோருக்கு திருப்பி கொடுக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தைப் பொறுத்த வரை இதுபோன்று குற்றம் நிகழாதவண்ணம் கல்லூரி, பள்ளி மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தொடர்ந்து விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற்று வருகின்றது.