சிறிய கோவில்களுக்கு மட்டுமே அனுமதி : விநாயகர் சதூர்த்தி குறித்து தமிழக அரசு விளக்கம்

Vinayagar Chathurthi Function : தமிழகத்தில் விநாயகர் சதூர்த்தி தினத்தன்று சிறிய கோவில்கள் மட்டுமே திறந்திருக்கும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

Tamilnadu News Update : விநாயகர் சதூர்த்தி தினத்தில் தமிழகத்தில் சிறிய கோவில்கள் திறக்கப்படும் என்று என்றும், சிலைகளை கரைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

வரும் செப்டம்பர் 10-ந் தேதி இந்தியா முழுவதும் விநாயகர் சாதூர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையின் போது இந்துக்கள் மட்டுமல்லாது பல தரப்பினரும் விநாயகர் சிலை வைத்து வழிபட்டு, குறிப்பிட்ட நாளுக்கு பிறகு அந்த சிலையை எடுத்து நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். அந்த வகையில் தமிழகத்தில் பல பகுதிகளில் விநாயகர்கள் சிலை வைக்கப்பட்டு கோலகலாமா இந்த பண்டிகை ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆனால் நடப்பு ஆண்டில் கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு விநாயகர் சதூர்த்தி பண்டிகை கொண்டாட தமிழக அரசு தடை விதித்துள்ளது. மேலும் பொது இடங்களில் சிலை வைப்பதற்கும், வழிப்பட்ட சிலைகளை நீதில் கரைப்படதற்கும், சிலைகள எடுத்துக்கொண்டு ஊர்வலமாக செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் வீடுகளில் சிலை வைப்பவர்கள் மட்டும் நீர்நிலைகளில் கரைக்க அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், திருப்பூரை சேர்ந்த இந்து முன்னேற்ற கழக தலைவர் கோபிநாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள்  தளர்த்தப்பட்டு வருவதால், வரும் செப்டம்பர் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்திக்கு சாலைகளில் சிலைகளை வைத்து வழிபட மக்கள் தயாராகி வருகின்றனர். கொரோனா பரவல் மீண்டும் ஏற்படாத வகையில், விநாயகர் சதூர்த்தி பண்டியை கொண்டாட நிலையான செயல்பாட்டு விதிகளை வகுக்க வேண்டும்.

இது தொடர்பா கடந்த  ஆகஸ்ட் 2ஆம் தேதி தமிழ்நாடு அரசுக்கும், டிஜிபி-க்கும் மனு கொடுத்தும், இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை. எனவே விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கான விதிகளை வகுக்கும்படி தமிழ்நாடு அரசுக்கும், டிஜிபி-க்கும்  உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணையில்,  தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விநாயகர் சதுர்த்தியன்று பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பி உள்ளது. இதன் அடிப்படையில் பொது இடங்களில் இந்த ஆண்டும்  கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என தெரிவித்தார்.

மேலும், விநாயகர் சதூர்த்தி தினத்தன்று சிறிய கோவில்கள் திறந்து இருக்க அனுமதிக்கப்படும். வழிப்பட்ட சிலைகளை இந்து சமய அறநிலையதுறை அதிகாரிகள் மூலம் கொண்டு நீர் நிலைகளில் கரைக்கப்படும் எனவும் விளக்கமளித்தார். இதனை ஏற்று கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க அவசியமில்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu vinayagar chathurthi fuction small temples are open

Next Story
சமூக நீதி நாள், நெசவாளர்களுக்கு 10% ஊதிய உயர்வு, வேலையாட்களுக்கு இருக்கை; சட்டப்பேரவை ஹைலைட்ஸ்Tamil Nadu budget 2021
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com