/indian-express-tamil/media/media_files/2025/05/16/mNzDmrHjU1L6QbNIdh7Z.jpg)
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், தொரவலூர் கிராமம், ஆலமரம் தெருவை சேர்ந்தவர் வேலாயுதம், (68), இவருக்கு சொந்தமான தொரவலூர் கிராமத்தில் உள்ள நிலத்தை அளந்து அத்து காட்டுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்துள்ளார்.
இந்த நிலத்தை அளந்து அத்துகாட்ட ஏற்பாடு செய்வதற்கு, தொரவலூர் கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் தனசேகர்,(33), த/பெ ரமேஷ், வீட்டு முகவரி 4A,ராஜேஸ்வரி நகர், எல்.ஆர்.புரம், பண்ருட்டி, கடலூர் விஏஓ உன் நிலத்தை அளந்து பட்டா பெறுவதற்கு வேலாயுதம் என்பவரிடம் 15.05.2025 ஆம் தேதி ரூ.10,000 லஞ்சமாக கேட்டுள்ளார்.
வேலாயுதத்திற்கு லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாததால் இன்று (மே16) கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில், தொரவலூர் கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் தனசேகர் என்பவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டி புகார் மனு கொடுத்துக்கொண்டார். அவரது புகார் மனு மீது கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு கு.எண்.4/2025 பிரிவு, 7 of The Prevention of Corruption (Amendment) Act, 2018, படி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கில் இன்று வேலாயுதம் என்பவரிடம் ரூ.10,000/- லஞ்சப்பணத்தை தொரவலூர், கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் தனசேகர் கேட்டு வாங்கியபோது அங்கு, மறைந்திருந்த காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் தலைமையிலான, லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்ச பணம் வாங்கிய தொரவலூர் கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் தனசேகர் என்பவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர்.
பாபு ராஜேந்திரன் கடலூர்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.