கஞ்சா போதையில் அதிகாலையில் 4 பேர் மீது தாக்குதல்; 2 வாலிபர்களை சுட்டு பிடித்த கடலூர் போலீஸ்

அதே பகுதியைச் சேர்ந்த கந்தவேல், பாலாஜி, சிவா ஆகிய மூன்று பேர் கஞ்சா போதையில் அந்த மண்டபத்தில் உள்ளே கார்த்திகை சரமாரியாக கம்பியாலும், கல்லாலும், கட்டையாலும் கொலை வெறியோடு தாக்கி உள்ளனர்.

அதே பகுதியைச் சேர்ந்த கந்தவேல், பாலாஜி, சிவா ஆகிய மூன்று பேர் கஞ்சா போதையில் அந்த மண்டபத்தில் உள்ளே கார்த்திகை சரமாரியாக கம்பியாலும், கல்லாலும், கட்டையாலும் கொலை வெறியோடு தாக்கி உள்ளனர்.

author-image
WebDesk
New Update
Tamilnadu Videu

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் போதையில் வாலிபர்கள் மூன்று பேர் விடியற்காலையில் மூன்று இடங்களில் நான்கு பேரை சரமாரி தாக்கியதில், படுகாயமடைந்து விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பழமலைநாதர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (25). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் மண்டபம் கட்டும் இடத்தில் கட்டுமான பணியும் செய்து கொண்டு அங்கு காவலாளியாகவும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அவர் அந்த கட்டிடத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த கந்தவேல், பாலாஜி, சிவா ஆகிய மூன்று பேர் கஞ்சா போதையில் அந்த மண்டபத்தில் உள்ளே கார்த்திகை சரமாரியாக கம்பியாலும், கல்லாலும், கட்டையாலும் கொலை வெறியோடு தாக்கி உள்ளனர்.

அதனை அந்த கும்பல் வீடியோ பதிவிட்டுள்ளனர் அதில் கார்த்திக் அவர்களை கும்பிட்டு என்னை விட்டு விடுங்கள் என்று கதறியும் அவர்கள் விடாமல் அவரை தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த கார்த்திக் அவர்களிடமிருந்து தப்பித்து ஓடிவந்துள்ளார். பின்னர் உறவினர்கள் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனை அறிந்த அந்த கும்பல் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு விடியற்காலையில் அங்கு கடைகள் திறந்திருந்த ராஜேந்திரனை அந்த கும்பல் சரமரியாக குச்சியாலும், கற்களாலும், தாக்கியுள்ளனர்.

இதனை அறிந்த எதிர் கடை சுந்தரமூர்த்தி அவரை தடுக்க சென்றுள்ளனர் அப்பொழுது அவரையும் அவர்கள் சரமாரியாக தாக்கி உள்ளனர். இவர்களும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பின்னர் அந்த கும்பல் விருத்தாசலம் எருமனூர் ரயில்வே பாலம் அருகே கள்ளக்குறிச்சியில் இருந்து விருத்தாச்சலம் வந்த அரசு பேருந்தை வழிமறித்து ஏறி உள்ளனர் அப்போது ஓட்டுநர் கணேசனை அந்த கும்பல் சரமாரியாக தாக்கி அவர்கள் கையில் வைத்திருந்த  பாட்டிலால் தலையில் அடித்து தாக்கியுள்ளனர்.

Advertisment
Advertisements

அப்பொழுது பேருந்தில் பயணம் செய்த மூன்று பயணிகள் அலறி அடித்து ஓடியுள்ளனர். கணேசன் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த கேடி கந்தவேல், பாலாஜி, சிவா மூன்று வாலிபர்கள் கஞ்சா போதையில் அதிகாலையில் ரகளையில் ஈடுபட்டு நான்கு பேரை சரமாரியாக கொலை வெறியோடு தாக்கிய சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்திகை கொலைவெறியோடு தாக்கும் வீடியோவை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட கேடி கந்தவேல் மற்றும் அவரது நண்பர்கள் மீது விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் டிஎஸ்பி பாலசுப்ரமணியன் தலைமையில் தனிப்படை அமைத்து மூன்று குற்றவாளிகளை தேடி வந்தனர்

இந்நிலையில் அவர்கள் விருத்தாசலம் அருகே பெரிய கண்டியாங்குப்பம் ரயில்வே கேட்டு அருகே முந்திரி தோப்பில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அந்த இடத்திற்கு காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி மற்றும் உதவி ஆய்வாளர் சந்துரு தலைமையில் போலீசார் அங்கு சென்றனர் அப்பொழுது அந்த முந்திரி தோப்பில் கந்தவேல், சிவா இரண்டு பேர் பதுங்கி இருந்தனர் அப்போது காவல்துறையினரை கண்டவுடன் அவர்கள் காவல்துறையினர் தாக்க முயற்சித்துள்ளனர்.

அப்போது ஆய்வாளர் பார்த்தசாரதி கந்தவேளை எச்சரித்துள்ளார் மீறியும் கந்தவேல் தனது கையில் வைத்திருந்த அருவாளால் வீரமணி என்ற போலீசாரை கையில் வெட்டி உள்ளார். மீண்டும் பார்த்தசாரதி ஆய்வாளர் எச்சரித்தும் மீண்டும் கந்தவேல், வேல்முருகன் என்ற போலீசாரை வெட்டியவுடன் உதவி ஆய்வாளர் சந்துரு தற்பாதுகாப்புக்காக கந்தவேலை முட்டியில் சுட்டுள்ளார். பின்னர் சிவா அங்கிருந்து தப்ப முயன்றபோது அவர் கால் மற்றும் கை முறிவு ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் இரண்டு பேரையும் போலீசார் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு கந்தவேல் மற்றும் சிவாக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது பின்னர் கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அரசு மருத்துவமனையில் காயம்பட்ட துணை சார் மற்றும் குற்றவாளிகளை நேரில் சென்று பார்வையிட்டு, பின்னர் துப்பாக்கி சூடு நடந்த இடத்தை ஆய்வு செய்தார். விருத்தாசலத்தில் போதையில் மூன்று இடங்களில் நான்கு பேரை தாக்கிய சம்பவத்தில் குற்றவாளி கந்தவேலை துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாபு ராஜேந்திரன் புதுச்சேரி

Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: