Advertisment

21 மாவட்டங்களில் கன மழை: வானிலை ஆய்வு மையம் அறிக்கை

Tamil Nadu News: தமிழகத்தில் நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், தேனி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
21 மாவட்டங்களில் கன மழை: வானிலை ஆய்வு மையம் அறிக்கை

அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் இந்த இடங்களில் கனமழை.

Tamil Nadu News: தமிழகத்தில் நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், தேனி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, தமிழ்நாட்டிற்கு மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று (செப்டம்பர் 5ஆம் தேதி) இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

publive-image

நீலகிரி, திருப்பூர், கோயம்பத்தூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சிராப்பள்ளி, தென்காசி, கரூர், சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல், தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

நாளை (செப்டம்பர் 6ஆம் தேதி) நீலகிரி, தென்காசி, கோயம்பத்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஈரோடு, தேனி, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருச்சிராப்பள்ளி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், செப்டம்பர் 7ஆம் தேதி, தமிழகத்தின் நீலகிரி, கோயம்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

செப்டம்பர் 8ஆம் தேதி நீலகிரி, கோயம்பத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

செப்டம்பர் 9ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு, சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Tamilnadu Weather Weather Forecast Report
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment