Rain in Chennai: வெப்பத்தால் தகித்த சென்னை கடந்த இரண்டு நாட்களாக குளுகுளுவென மாறியுள்ளது.
வெயிலால் மண்டைக் காய்ந்திருந்த சென்னை மக்களின் மனம் தற்போது ஜில்லென்று மாறியுள்ளது. முன்பே தமிழகத்தில் பல பகுதிகளில் மழை பெய்து வந்தாலும், வட தமிழகத்தின் மீது மழையின் பார்வை படாமலே இருந்தது. இந்நிலையில் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதோடு இனி படிப்படியாக வெப்பம் குறையும் என்றும் குறிப்பிட்டார்.
இதற்கிடையே நேற்றிரவு வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், “நீலகிரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, தேனி” ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். தமிழகத்தின் குறிப்பிட்ட சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வார இறுதி - மழை - இளையராஜா என குஷியாகிவிட்டனர் சென்னைவாசிகள்!