Tamilnadu weather today : கோவை, தர்மபுரி , தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று (16ம் தேதி) மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் 15ம் தேதி இரவு 10 மணியளவில் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திருப்பூர், ஈரோடு, தேனி நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். இந்த பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய சூழல் நிலவும். காற்றின் வேகம் 40 முதல் 50 கி.மீ அளவில் இருக்கும்.
தமிழகத்தின் மற்ற பகுதிகளில் வரும் 18ம் தேதி வரை அனல்காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வுமையம் முன்னரே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் இருக்கும்.
மழைப்பதிவு
மே 16ம் தேதி காலை 8.30 மணிநிலவரப்படி பதிவான மழையளவு ( செ.மீ)
பெருந்துறை - 4 செ.மீ
பாலக்கோடு, நத்தம் - 3 செ.மீ
அரூர், ஈரோடு, ஆரணி ஹோகனேக்கல், கோபிசெட்டிப்பாளையம், ஆத்தூர், திருச்செங்கோடு- 2செ.மீ
பெண்ணாகரம், பவானி, தோகைமலை, வாடிப்பட்டி, ஊத்தங்கரை, செங்கம், போளூர், சூளகிரி - 1 செ.மீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை.