தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்,கடலூர் இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் மழை:
வங்கக் கடலின் தென்மேற்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது என்று நேற்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது வானிலை மாற்றங்களால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மழை பெய்யும். குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் முதல் கடலூர் வரை சில இடங்களில் மட்டும் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தின் நகர்ப்பகுதி, திருவையாறு, கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம், அணைக்கரை, சுவாமிமலை பட்டீஸ்வரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலே மழை பெய்து வருகிறது.
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை, மணல்மேடு, வேதாரண்யம், கோடியக்கரை, தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.