Tamilnadu Weather news Tamil: வளிமண்டல சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் பல இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
வளிமண்டல சுழற்சி ஏற்பட்டுள்ளதால் கடந்த சில தினங்களாகவே தமிழகத்தில் ஆங்காங்கே பரவலான மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, மேலும் இரண்டு தினங்களுக்கு விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, சேலம் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பிருக்கிறது என்றும் ஆய்வு மையம் குறிப்பிடுகிறது. புதுச்சேரியில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவித்திருக்கிறது.
மத்திய வங்கக்கடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி வரும் நிலையில், வருகிற 23-ம் தேதி வரை மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"