சென்னையை நனைத்த காலை மழை: நகரவாசிகள் மகிழ்ச்சி!

சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Light to moderate rain is likely to occur at isolated places over Tamilnadu:  தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தற்போது தெரிவித்திருக்கிறது.

கேரளா மற்றும் தமிழக எல்லையை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல சுழற்சி இன்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலைக் கொண்டுள்ளதன் காரணமாக இந்த மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மழை

இன்று காலை அண்ணாநகர், அரும்பாக்கம், முகப்பேர், அம்பத்தூர், நுங்கம்பாக்கம், புரசைவாக்கம், ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, மந்தைவெளி, நந்தனம், ஈக்காட்டுத்தாங்கல், சூளைமேடு, ராயபுரம், ராயப்பேட்டை, போரூர், விருகம்பாக்கம், வடபழனி, கோடம்பாக்கம் உள்ளிட்ட சென்னையின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது. சில நாட்களாக சென்னையில் பெய்யும் இந்த மழையால் நகரவாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

 

 

இன்று தமிழகத்தில் எந்த மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்படவில்லை:  

எச்சரிக்கை குறியீடு:

தமிழகம் மற்றும் புதுவைக்கான அடுத்த ஒரு வாரத்திற்கான  முன் அறவிப்பையும் வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் படி, தமிழகம் மற்றும் புதுவையில் ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் வரும் 17ம் தேதி ( செவ்வாய்கிழமை ) அன்று தமிழக கடலோர மாவட்டம், தென்தமிழக கடலோர மாவட்டம், பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

படம் – தமிழ்நாடு வெதர்மேன்

 

தமிழகத்தில் டிசம்பர் ஒன்று முதல் டிசம்பர் 15ம் தேதி முதல் பதிவான மழை குறித்த விவரம்:

நன்றி – சென்னை வானிலை ஆய்வு மையம்

 

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close