தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று (ஏப்ரல் 23) இடி, மின்னல் மற்றும் 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்: 12 மணி நேர வேலை மசோதா; யாரும் எதிர்பாராத முடிவை முதல்வர் எடுப்பார்; அமைச்சர் சேகர் பாபு
மேலும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, கரூர், திருச்சி, நாமக்கல் உட்பட 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும். ஏப்ரல் 24 முதல் மூன்று நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும். 27-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்யும், என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று அதிகபட்ச வெப்பநிலை இயல்பில் இருந்து 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது நேரடி வெயிலில் செல்வது முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil