தென் தமிழகத்தில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென் தமிழகத்தில் கனமழை:
செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன், தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றார். தொடர்ந்து பேசிய அவர், “அரபிக்கடல் பகுதியில் இருந்து உள் தமிழகம் வழியாக இலங்கை கடற்கரை வரை, வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.
இதன் காரணமாகவும் வெப்பச்சலனம் காரணமாகவும் தென் தமிழகத்தில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வட தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதேபோல் உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த 24மணி நேரத்தில் அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் 13 சென்மீட்டர் மழை பதிவாகி உள்ளது.” என்றார்.