தமிழகத்தின் ஓரிரு இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் ஜூன் 1 வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "இன்று முதல் ஜூன் 1 வரை, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், லேசானது முதல் மிதமான வரை மழையும் பெய்யக் கூடும்.
வெப்ப நிலையை பொறுத்தவரை, அடுத்த 5 நாட்களுக்கு, தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில், பொதுவாக 2 முதல் 3 டிகிரி செல்ஷியஸ் உயரும். இன்று அதிகபட்ச வெப்பநிலை அனேக இடங்களில் இயல்பை ஒட்டியே இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய, வடக்கு வங்கக்கடல் பகுதிகளிலும், வடக்கு அந்தமான், மாலத்தீவு பகுதிகளிலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், அந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“