தமிழ்நாட்டில் கடந்த 15-ந் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று 13 மாவட்டங்களக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் 15-ந் தேதி வடக்கிழக்கு பருவமழை தொடங்கியது. அன்றில் இருந்து பெய்த கனமழையின் காரணமாக சென்னையில் பல இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும், கார்கள் வைத்திருப்பவர்கள், வெள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு தங்களது கார்களை மேம்பாலங்களில் நிறுத்தினர். இதற்கு காவல்துறை அபராதம் விதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
அதே சமயம் சில மணி நேரங்களில் அந்த அபராதங்கள் வாபஸ் பெறப்பட்டதாகவும் கூறப்பட்டது. வலிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில், ஓரிரு நாட்கள் பெய்த கனமழையால் சென்னை நகரம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்த நிலையில், அடுத்தடுத்த நாட்கள் மழை இல்லாததால், பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்தனர். சென்னையில் தற்போது லேசான மழை பெய்து வரும் நிலையில், திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், வலிமண்டல மேலடுக்கு சுழற்றி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில், கடலோர மாவட்டங்களில், இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது. இதனிடையே இன்று, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil