7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வருகிற நவம்பர் 9ஆம் தேதி ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வட கிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. பல இடங்களில் ஏரிகள், அணைகள் நிரம்பி கொண்டிருப்பதால், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

நவம்பர் 7: நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை அப்டேட்

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும் இடை இடையே 60 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும். கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் வீச வாய்ப்பு உள்ளது. இப்பகுதிகளுக்கு மீனவர்கள் இன்று செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எச்சரிக்கை அறிவிப்பு

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வருகிற நவம்பர் 9ஆம் தேதி ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu weather update heavy rain in 7 districts today

Next Story
ஆப்பரேஷன் ஜாப் ஸ்கேம் அதிரடி நடவடிக்கை: டிஜிபிக்கு முதல்வர் உத்தரவு… 30 மோசடி நபர்கள் கைதுCM MK Stalin order to DGP, Operation Job Scam, 30 cheating accused arrested in Tamilnadu, ஆப்பரேஷன் ஜாப் ஸ்கேம், காவல் துறை அதிரடி நடவடிக்கை, வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த 30 பேர் கைது, டிஜிபி, முதல்வர் ஸ்டாலின், dmk, dgp sylendra babu, tamil nadu
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com