கொட்டித் தீர்க்கும் மழை… பள்ளிகளுக்கு விடுமுறை

Tamilnadu weather update : புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

Tamilnadu weather update, பள்ளிகளுக்கு விடுமுறை
Tamilnadu weather update, பள்ளிகளுக்கு விடுமுறை

Tamilnadu weather update : தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்துள்ளது. இன்று காலை சென்னை முகப்பேர், அண்ணாநகர், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Tamilnadu weather update : பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக புதுக்கோட்டையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கபபட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் கணேஷ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேலும் நாகை மாவட்டத்தில் நிவாரண முகாம்களாக உள்ள பள்ளிகளுக்கும், சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். காரைக்கால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கேசவன் உத்தரவிட்டுள்ளார்.

கஜ புயலுக்கு பிறகு மீட்பு பணி நடைபெற்று வரும் டெல்டா பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்துள்ளதால், கடினங்கள் ஏற்பட்டுள்ளது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu weather update heavy rain in tamilnadu schools declared holiday

Next Story
அனல் குரலுடன் மீண்டும் வாருங்கள் விஜயகாந்த்: ஒரு உருக்கப் பதிவுTamil Nadu news today live updates
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express